பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவனார் 設認5 ஒப்புமையான சொற்களைக் கொண்டு அற்புதமான மந்திர வேலைகளையெல்லாம் செய்து விடுவார்கள் என்று எடுத்துக் காட்டுகள் மூலம் விளக்குவார். இவர் எடுத்துக்காட்டாக அடிக்கடிக் கூறும் பாடல் ஒன்று நினைவிற்கு வருகின்றது. கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவனேல் கூடென்று --கூடல் இழைப்பாள்போல் காட்டி இழையாது நிற்கும் பிழைப்பில் பிழைபாக் கறிந்து. என்பது. இதில், கூடல் என்பது மதுரைக்குப் பெயர். கூடல் இழைத்தல் என்றால் மணலைப் பரப்பி ஒற்றை விரலால் வளைத்து வளைத்து சங்கிலித் தொடர்போன்று கண்ணை மூடிக்கொண்டு வட்டம் இடுதல். பெரும்பாலும் இதனைக் காதல் வயப்பட்ட மகளிர் மேற்கொள்ளும் செயல். இவ்வாறு வட்டமிடும்போது முடிகின்ற கோடு தொடக்கக் கோட்டைத் தொட்டுவிட்டால் நினைத்த காரியம் சித்தியாகி விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. இங்கு இந்தப் பாடலில் காதவியொருத்தி கூடல் பெருமா னாகிய பாண்டியனை எண்ணிக் கூடல் இழைக்கின்றாள். பாண்டியன் வருவானா? வர மாட்டானா? அவனோடு கூடுவதற்குரிய பேறு கிட்டுமா? கிட்டாதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அவளது மனம் துடிக்கின்றது. ஆனால் கோடுகள் கூடுவது தவறிவிட்டால் மனம் சஞ்சலப் படும் என்று எண்ணி கூடல் இழைப்பதை இடையில் நிறுத்தி விடுகின்றாள். இவ்வாறு கூறி மீண்டும் ஒருமுறை பாடலைப் படிப்பார்; இல்லை, பாடுவார்-தமக்கே உரிய இனிய குரலில். தலைவியின் பாவனையை கூடல்' என்ற ஒரு சொல்லே திரும்பத் திரும்ப வந்து எத்தனை அழகாகப் பொருளைத் தெரிவிக்கின்றது: என்று விளக்குவார். இத்தனை சொற்களும் வெளிப் பார்வைக்கு ஒரே வித மான உடைகளை அணிந்தவைகளாகக் காணப்பெறினும்