பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 மலரும் நினைவுகள் அவற்றிற்குரிய இடங்களிலும் குறிப்புகளிலும் நல்ல வேற்றுமை உண்டு என்பது தெரிகின்றதல்லவா? என்று தம்முன் வீற்றிருப்பவர்களையே கேட்பார். இஃது இவர் கையாளும் ஒரு வகை பாணி. டி.கே.சி கையாளும் பாணி. இன்னொரு பாடல் சேரநாட்டரசனைப் பற்றியது. வஞ்சியான் என்றவன்தன் ஊருரைத்தான் யானு மவன் வஞ்சியான் என்றதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியே. வஞ்சியேன் வஞ்சியேன் என்றென்று உரைத்துப்பின் வஞ்சித்தான் வஞ்சியார் கோ. என்பது பாடல். தலைவியொருத்தி தனது தோழியிடம் வஞ்சி நாட்டு மன்னன் வஞ்சியேன், வஞ்சியேன்” என்று தன்னிடம் சொல்லியும் வஞ்சித்த வரிசையை எடுத்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இரசவர்க்க மாங்கனியை நெருடி நெருடி அதன் சாற்றை வருவிப்பதுபோல் பாடலைத் திரும்பத் திரும்பப் படித்துஇல்லை,இசையுடன் பாடி-பாடலின் பொருளைப்பிழிந்து எடுத்துக் காட்டுவார். அந்தக் காலத்தில் இவர் தோன்றும் சொற்பொழிவு மேடைகளுக்குக் கணக்கே இல்லை. இங்ங்ணம் உணர்ச்சியுடன் கவிதைகளை விளக்கிவந்த பெருமகன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். கல்லூரி வளாகத்திற்குக் குடியேறின. பின்னர்தான் இச் சோக நிகழ்ச்சி நடைபெற்றது. நானும் என் முதல்வர் துரைக்கண்ணு முதலியாரும் கல்லூரியிலிருந்த வண்ணம். இவருடைய இல்லம் சென்று பார்த்தோம்; வருந்தினோம் . ஓயாது புகைப்பார். சிறு சுருட்டுப் புகையே இவர்தம் ஆவியைச் சுருட்டிக்கொண்டு போய்விட்டதோ என்று கலங்கினோம். நானும் பலமுறை இப் பழக்கத்தை விட்டொழியுங்கள்' என்று கூறியுள்ளேன். ஆகட்டும் மிஸ்டர் ரெட்டியார்’ என்று சொல்வாரேயன்றி பழக்கத்தை விட்டொழித்த பாடில்லை. என் செய்வது?