பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரிய்ர் ஆ. முத்துசிவனார் 327 கள்ளம் கபடம் அற்ற வெள்ளை மனம் கொண்ட பெரு மகனார் மறைந்தார். மாணவர்களும் ஆசிரியர்களும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வருவதைக் கண்டோம். நானும் முதல்வர் திரு. முதலியாரும், புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை-இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேளறச் சென்றான் எனப்படுத லால்.’ என்ற சமண முனிவரின் யாக்கை நிலையாமையை உணர்த்தும் பாடலை நினைத்துக்கொண்டோம். இன்னும் பல்லாண்டுகள் வாழவேண்டியவர் இளமையிலேயே போய் விட்டாரே என்று நினைந்தவண்ணம் கல்லூரிக்குத் திரும்பி னோம். அந்த அழகப்பா கல்லூரி ஆசிரியர்களும் மாணவர் களும் சேர்ந்து பேராசிரியர் ஆ. முத்து சிவனார் நினைவு மலர்' என்ற பெயரில் நினைவுமலர் ஒன்று வெளியிட்டு இவரது நினைவுச் சின்னமாக்கினர். 4. நாலடியார்- 29