பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 3.29 இல்லமேயானாலும் அஃது ஒர் ஆச்சிரமத்தின் களையுடன் காணப்பட்டது. ஒராண்டிற்குமுன் அறிமுகமாய்விட்ட தனால் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக இனங் கண்டு கொண்டோம். நான் சென்ற நேரம் முற்பகல் பத்து மணி. நான்கு பக்கமும் நூல்கள் நிறைந்த அலமாரிகள் சூழ இருந்த அறையின் நடுவில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஏதோ ஒரு நூலில் ஆழங்கால் பட்டிருந் தார். திருநீறும் சந்தனப் பொட்டும் தாங்கிய அகன்ற நெற்றி, புன்முறுவல் பூத்த அன்பு ஒழுகும் திருமுக மண்ட லம், தமிழே உருக்கொண்டது போன்ற பொன்னிறத் திருமேனியுடன் காட்சி தந்தார். கையுறையாகக்கொண்டு சென்ற இரண்டு ஆப்பிள் கனிகளைத் தந்து வணங்கி னேன். நான் ஒருவாரத்திற்குமுன் அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக் கல்லுரியில் பணியேற்றிருப்பதைக் கூறினேன்; மிகவும் மகிழ்ந்தார். சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். குளிர்பானம் வழங்கினார். பின்னர் விடைபெற்றுத் திரும்பினேன். அன்று பெற்ற நட்பு நான் காரைக்குடியில் இருந்த பத்தாண்டுக் காலத்திலும் திருப்பதிக்குச் சென்ற பிறகும் வளர்ந்தோங்கியது. நினைவு - 1 : காரைக்குடியில் நான் இருந்த காலத்தில் முதல் இரண்டு மூன்று ஆண்டுகள் வரை சனி, ஞாயிறு மட்டிலும் அமராவதி புதுாரிலிருந்து இந்து மதாபி மான சங்கத்திற்கு வந்து சங்கத்திலேயே தங்கியிருந்தார். காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் தவறாமல் அவரை வந்து காண்டேன். சங்கத்தில் நல்ல நூலகம்ஒன்று இருந்தது. அதில் கிடைத்தற்கரிய பழைய நூல்கள், செந்தமிழ்த் (மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு) தொகுதி கள்; மறைமலையடிகள் வெளியிட்ட ஞானசாகரம் என்பவற்றின் தொகுதிகள் போன்றவை இருந்தன. சிறுவர்கள் சாக்லேட், பப்பர் மிட்டாய்களை நாடுவது போல நான் நூல்களை நாடும் பழக்கத்தைச் சிறு வயதிலிருந்தே வளர்த்துக் கொண்டிருந்தேன்.