பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.30 மலரும் நினைவுகள் இப்பழக்கத்தால் சங்கத்திற்கு வரும் போதெல்லாம். நூற்கடலில் மூழ்கி விடுவேன். தமிழ்க் கடல் என் ஆர்வத். தைக் கண்டு மகிழ்வார். விரைவில் என்னைச் சங்கத்து உறுப்பினராக்கி விட்டார்; மூன்று நான்கு ஆண்டுகள் நிர்வாக சபையிலும் இடம் தந்து விட்டார். மதுரையில் மீனாட்சித் திருக்கோயிலுக்கு வழிபாட்டுக்குச் செல்வோர் சொக்கலிங்கப் பெருமானை தரிசித்து வருவதுபோல், நான் நாடோறும் இந்து மதாபிமான சங்கம் சென்று தமிழ் கடல் இராய. சொ.விடம் அளவிளாவிக் கொண் டிருந்தேன், இராய. சொ, விடம் எவ்வளவு நேரம் வேண்டு. மானாலும் பேசிக் கொண்டிருக்கலாம். பேச்சு இலக்கியம் பற்றியே இருக்குமாதலால் அதனால் என் தமிழறிவில் மெருகேறியது போன்ற மாற்றம் பெற்றது. நினைவு-2 : நேர்மை, ஒழுங்கு, நேரந்தவறாமை எல்லாம் ஒருங்கு திரண்டு வடிவம் கொண்டது போன்ற ஒரு மாமனிதர் இவர். இந்து மதாபிமான சங்க நிர்வாக சபைக் கூட்டத்தில் இவரது கண்டிப்பைக் காணலாம். மாலை மூன்று மணிக்குக் கூட்டம் தொடங்கும். கூட்டத் திற்கு வேண்டிய குறைந்த அளவு உறுப்பினர் (Quorum) வந்து விட்டவுடன் கூட்டத்தைத் தொடங்கி விடுவார். தீர்மானங்கள் எண்ணிட்டு உடனுக்குடன் நிகழ்ச்சிப் பதிவேட்டில் (Minutes book) GTKlp 5lul (5 67Qub. தொடங்கும்போது இருப்பவர்களின் கையெழுத்து மட்டி லும் போடப்பட்டு தீர்மானங்கள் எழுதப்பெறும். இரண்டு தீர்மானங்கள் எழுதப்பெற்றவுடன் ஒர் உறுப் பினர் தாமதப்பட்டு வந்தால், அவர் இந்த இரண்டு தீர்மானங்கள் எழுதப் பெற்றதை அடுத்து கையெழுத்து போடுவார். இதனை அடுத்து மூன்றாவது தீர்மானம் எழுதப்பெறும். ஐந்து தீர்மானங்கள் எழுதப்பெற்ற வுடன் ஒருவர் தாமதப்பட்டு வந்தால் அவர் அடுத்து கையெழுத்திடுவார். இவர் கையெழுத்திற்குக் கீழ் ஆறாவது தீர்மானம் எழுதப்பெறும். எல்லாத் தீர்மானங்