பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔岛忍 மலரும் நினைவுகள் மருத்துவர். நீக்கத்தக்க பாடல்களை எடுத்துக் காட்டு வார். குழு இதனை ஆராயும், இராய சொ. முடிவு சொன்னவுடன் பாடல் நீக்கப்படும்; அல்லது வைத்துக் கொள்ளப்படும். இராமாயணம் முழுவதையும் இப்படி ஆராய்ந்தோம். இத்தகைய அநுபவத்தை என் வாழ் நாளில் என்றுமே பெற்றதில்லை. இந்தத் திட்டத்தின் செயற்பாடு சொ. முரு. வைப் பற்றிய கட்டுரையில் (கட்டுரை -22) சற்று விரிவாக விளக்கப்பெற்றுள்ளது. தினைவு.-4 : மகளிர் இல்லத்தில் கம்பராமாயண ஆராய்ச்சி நிறைவு பெற்றது. ஒரு நாள் மாலை பல பெரியோர்கள் இந்து மதாபிமான சங்கத்தில் கூடியிருந்த பொழுது ஏதாவது ஒர் இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பெற்றது. பலர் பல இலக்கியத் தின் பெயர்களைக் குறிப்பிட்டனர். இறுதியாக வில்லி பாரதம் பற்றிப் படிக்கலாம் என்று முடிவாயிற்று. சனிக் கிழமைதோறும் மாலை மூன்று மணிக்குத் தொடங்கி ஆறு மணி வரை தொடரலாம் என்று முடிவு செய்யப் பெற்றது. திருநாவுக்கரசு செட்டியார் பாடலை இசை யுடன் படிக்க, இராய சொ. அவர்களின் விளக்கம் தொடர்ந்தது. இரண்டாண்டுக்குமேல் வில்லி பாரதம் தொடர்ந்து நடை பெற்றது. சொல்லற்கரிய இலக்கிய அநுபவங்கள். எதைச் சொல்வது? எதை விடுவது? எனக்கு இந்த அநுபவம் பெறற்கரிய ந்பறாக அமைந்தது. எல்லா நிகழ்ச்சிகளையும் விட ஒன்று மட்டிலும் மிகப் பசுமை யாக உள்ளது, கன்னனுக்குக் கண்ணன் தந்த காட்சிதான் அது. நீலநெடுங் கிரியும்மழை முகிலும் பவ் வ நெடுநீரும் காயாவும் நிகர்க்கும் இந்தக் கோலமும்,வெங் கதைவாளும், சங்கு, நேமி கோதண்டம் எனும்படையும் குழையும் காதும்