பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 83,፮ மாலைநறுந் துழாய்மார்பும், திரண்ட தோளும், மணிக்க முத்தும் செவ்விதழும், பாரிசாதக் காலைமலர் என மலர்ந்த முகமும், சோதிக் கதிர்முடியும் இம்மையிலே கண்ணுற் றேனே" திருநாவுக்கரசுச் செட்டியார் இப்பாடலைப் படிக்கும். போதே குரல் தழுதழுத்து உருகி விடுகின்றார். கூடியிருந் தோர் கசேந்திராழ்வானுக்குத் தந்த காட்சியையே கண்டு மனம் புளகாங்கிதம் அடைகின்றனர். இராய. சொ.வின் விளக்கம் இந்த அநுபவத்திற்கு முத்தாய்ப்பு வைத்து விடுகின்றது. மீண்டும் இந்தப் பாடலைத் திருநாவுக்கரசுச் செட்டியார் இசையேற்றிப் படி க்கும்போது கூடியிருந் தோரின் பக்தியநுபவம் கொடுமுடிக்குச் சென்று விடு கின்றது . நினைவு-5 : இந்து மதாபிமான சங்கத்தின் நிர்வாக சபைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமையும் வில்லி பாரத வகுப்பு சனிக் கிழமையுமாக நடைபெறும்போது சங்கக் கட்டடம் கலகலத்துப் போகும். வெளியூர் நிர்வாக சபை உறுப்பினர்களும் வந்து சேர்வார்கள். இப்படி வருபவர்கள் திரு. கா. காடப்பச் செட்டியார் (ஆத்தங்குடி), திரு சொக்கலிங்கம் செட்டியார் (காரைக் HLo?-> ஆனால் கும்பகோணத்தில் தங்கியிருப்பவர்). மற்றொருவர் திரு சொக்கலிங்கம் செட்டியார் (புதுக் கோட்டை) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். ஒரு சமயம் மாலை நேரத்தில் இராய சொ. நாற்காலியிலும், அவருக்கு எதிராக பக்கவாட்டில் போடப் பெற்ற பெஞ்சு களில் எதிரெதிராக கும்பகோணம் முத்த. வெ. சொக்க விங்கம் செட்டியாரும், புதுக்கோட்டைச் சொக்கலிங்கம் செட்டியாரும் அமர்ந்திருந்தனர். மூவரும் சிவபூசை எடுத்தவர்கள். இவர்களுள் கும்பகோணம், முத்த. வெ. சொ. செட்டியார் இராய. சொ. வைப் போலவே, 1. பதினேழாம் போர்-247