பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.334 மலரும் நினைவுகள் செம்மேனியுடன் திகழ்வார்; புதுக்கோட்டைச் செட்டியார் மாநிறமேனியுடையவர். இருவருமே சத்துவ குணம் படைத்த சாதுக்கள். மூவரும் மாலை நியம நிட்டைகளை முடித்துக் கொண்டு நெற்றியிலும் திருமேனியிலும், வெண்ணிற்றுப் பட்டை தீட்டிய நிலையில் அமர்ந்திருந் தனர். வேறு சில அன்பர்களும் அருகில் இருந்து உரை யாடிக் கொண்டிருந்தனர், இராய. சொ. புதுக் கோட்டையாரைப் பார்த்து, நம்முடைய புதுக்கோட்டை சொ. முனியாண்டிவிலாஸ் சோற்றுப்பானைக்குப் பட்டை திட்டியது போல் பட்டை தீட்டிக்கொண்டு அமர்ந்திருக் கின்றார்கள்' என்று நகைச் சுவையை உதிர்த்தார். புதுக் கோட்டையார் உட்பட அனைவருமே நகைத்து மகிழ்ந் தார்கள். இப்படிப் பல சந்தர்ப்பங்களில் நண்பர்கள் மகிழ்வதற்காகவே நகைச்சுவையை உதிர்ப்பார்கள் இராய சொ. நினைவு-6 : காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தில் தங்கியிருக்கும்போது நண்பர்கள் சில சமயம் அவருக்குத் தமது வீட்டில் விருந்து வைப்பார்கள். நான் அவருடன் நிழல்போல் நெருங்கிப் பழகுவதால் என்னை பும் அந்த விருத்துக்கு அழைப்பார்கள். நண்பர்கள் இராய.சொ.வுக்குப் பிடித்தமான உணவு வகைகள், காய்கறி வகைகள், கூட்டு வகைகள், கீரைவகைகள் இவற்றைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி விருந்து உணவு வகைகள் தயாராகும். விருந்தின்போது விட்டு ஆச்சிமார்கள் உணவு வகைகளின் பெயர்களைச் சொல்லி அவருக்குப் பறிமாறுவார்கள். அக்காலங்களிலெல்லாம், இருந்தோம்பி இல் வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள், 87) என்ற குறள் நினைவில் எழுந்து மகிழ்வூட்டும். இங்ங்னம் இராய.சொ.வுடன் நான் கலந்து கொண்ட விருந்துகளில் சில : கும்பகோணம் முத்த. வெ. சொக்கலிங்கம்