பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மலரும் நினைவுகள் னாரின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் அவர்கள். அன்னார் கலிங்கத்துப்பரணியை நன்கு ஆராய்ந்து ஆங்காங்குள்ள நயங்களையெல்லாம் இந்நூலில் அழகுபட எடுத்துக் காட்டியிருக்கின்றார். கவிங்கத்துப்பரணி கற்பார்க்கு இந்நூல் பேருதவி செய்யவல்லது. கடை திறப்பின் உட்பொருள்' என்ற பகுதியில் பேராசிரியர் ரெட்டியார் காட்டியிருக்கும் கருத்தே கொள்ளத்தக்கது’’ என்று வாழ்த்தியுள்ளார். இராய. சொ. அவர்களின் வாழ்த்தின் கனத்தால் தினமணிச்சுடர்' என்ற வார இதழிலும் (அப்போது துமிலன் அதன் துணை ஆசிரியர்) ஓர் ஆறு திங்கள் என் இலக்கியக் கட்டுரைகள் வெளி வந்து கொண்டிருந்தன. நான் இலக்கிய உலகிற்கு இதழ்களின் வாயிலாக முதன் முதலில் அறிமுகமானது இராய சொ. அவர்களின் ஆசியால்தான் என்று சொன்னால் அது மிகை பாகாது. இக்காலத்தில் ஒராண்டுக் காலம் மதுரையி லிருந்து வெளி வந்த தமிழ்நாடு'- ஞாயிறு மலரில் என் சங்க இலக்கியக் கட்டுரைகளும் வெளி வந்து கொண்டிருந் தன (அப்போது அதன் துணை ஆசிரியர் எம். எஸ். பி. சண்முகம் என்பார்), நினைவு-10 : 1960-ஆகஸ்டு முதல் காரைக்குடிப் பணியைத் துறந்து பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பகங்கொண்டலாகிய ஏழுமலையான் எழுந்தருளி யிருக்கும் திருப்பதி பல்கலைக்கழகத்தில் பணியேற்றேன். குடும்பம் காரைக்குடியில் (1965 மே வரை) தான் இருந்தது. இதனால் விடுமுறை நாட்களில் காரைக்குடியில் தான் இருப்பேன். இக்காலத்தில் இராய. சொ. வின் துணைவியார் திருநாடு அலங்கரித்து விட்டார்கள். இதனால் சமையல்காரனை அமர்த்திக் கொண்டு இந்து மதாபிமான சங்கத்தின் மாடியில் (ராய.சொ. உமையாள் மண்டபத்தில்) குடியிருந்தார். அப்பொழுது அவரைச் சந்தித்து இந்து மதாபிமான சங்கத்தில் ஆயுள் உறுப்பின