பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் 33.9 னானேன். (இதற்கு முன்னர் 14 ஆண்டுகளாகச் சாதாரண உறுப்பினர்). இக்காலத்தில் இரண்டு மூன்று. ஆண்டுகள் காரைக்குடிப் பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர் பொறுப்பில் இருந்தார். இந்தக் காலப்பகுதியில் இத்திருக் கோயிலின் திருப்பணியை மேற்கொண்டு நிறைவுச் செய் தார். வைகுண்ட வாசலை இயங்கச் செய்தார். மகர் நோன்பு விழாவில் ஐந்து கோவில் சாமிகளின் புறப் பாட்டை மிகச்சிறப்புடன் குதிரை வாகனங்களில் எழுந் தருளச் செய்து காந்தி சதுக்கத்தில் சிறப்பாக அம்பு போடும் விழாக்களை அற்புதமாக நடைபெறச் செய்தார். இக்காலத்தில் நான் ஏற்கெனவே எழுதி பல இதழ் களில் வெளியான ஒன்பது கட்டுரைகளை அறிவுக்கு விருந்து ' என்ற தலைப்பில் (செப்டம்பர் 1963 நூலொன்றை வெளியிட்டேன். இதனை நான் இராய. சொ. விடம் கொண்டிருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக, பக்குவமெய்ஞ் ஞானியென உலகம் போற்றும் பாரதியைக் கண்டுமகிழ் பேறு பெற்றோன்; மிக்கநறுங் கலைத்தமிழ்நூல் ஒன்று கூடி வெண்ணிறு புனைந்ததென விளங்கும் சான்றோன்; தக்கதிரு வாசகத்தை மூன்று போதும் தலைதாழ்த்திப் பணிந்திடுவோன்; எங்கள் ராய சொக்கலிங்கம் எனும்பெயர்கொள் தமிழ்க் கடற்குச் சொல்விருந்தாம் இச்சிறுநூல் உரிமையாகும். என்ற பாடலின்மூலம் அன்புப் படையலாக்கி மகிழ்ந் தேன். இவருடைய ஆசியால் இந்த நூல் 1974-76 ஆண்டு களில் சென்னைப் பல்கலைக் கழக பி. ஏ., பி. எஸ்சி வகுப்புகளுக்குப் பாட நூலாக வைக்கப்பெற்றுக் கணிச மான வருவாயைத் தந்தது. இந்த வருவாய் என் முதல்