பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா 1949-இல் காரைக்குடிக் கம்பன் திருநாளைக் காணச் சென்றிருந்தபோது முதன்முதலாக அறிமுகப் படுத்தப்பெற்ற பெருமகனார் இவர். கம்பன் திருநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே மகளிர் இல்ல ஆண்டு விழாவும் ஒருநாள் மாலை நடைபெற்றது. இரசிகமணி டி.கே.சி. இந்த விழாவிற்குத் தலைமை வகித்ததால் அவருட ன் இந்த விழாவிற்கும் போயிருந் தேன். இதனால் சொ. முரு. அவர்கள் மேற்கொண்டிருந்த பெருங்கல்விப் பணியை நேரில் அறிந்து கொள்ள முடிந்தது. காரைக்குடியில் பணியேற்ற (ஜூலை 1950) பத்து தினங்களுக்குள் ஒருநாள் மாலை இரண்டு சாத்துக்குடிப் பழங்களை கையுறையாகக் கொண்டு சொ. முரு. அவர் களைப் பார்க்க அமராவதிப் புதுாருக்கு இரண்டு ஃபர்லாங் தொலைவிலுள்ள மகளிர் இல்லத்திற்குச் சென்றேன். அப்போது சொ. முரு. அவர்கள் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார்கள். அவரைக் கண்டு வணக்கம் செலுத்தி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். 'உங்களை நன்றாகத் தெரியுமே. சென்ற ஆண்டு தாங்கள் கம்பன் திருநாளுக்கு வந்திருந்தீர்கள். அப்போது இங்கு இரசிகமணி டி.கே.சி. தலைமையில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்கும் வந்திருந்தீர்கள். அதற்கு ள் உங்களை எப்படி மறக்க முடியும்?' என்று: