பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா 343 அன்பாகப் பேசினார்கள். பேசிக் கொண்டே அவர்தம் தனி அறைக்கு என்னை இட்டுச் சென்றார்கள். காஃபி பானம் வழங்கினார்கள். சுமார் ஒர் அரைமணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்; நான்கு தினங்களுக்கு முன் ராய. சொ. அவர்களைப் பார்த்ததையும் தெரி வித்தேன். ராய. சொ. தமக்கு ஐந்து வயது சிறியவர் என்பதைத் தெரிவித்தார் பேச்சினிடையில் . நினைவு.! : நான் திருச்சியில் புனித சூசையப்பர் கல்லூரியில் படித்த பொழுது (1984-89) அவர் நடத்தி வந்த குமரன்” என்ற இதழை மிக ஆர்வத்துடன் படித்து வந்ததைக் குறிப்பிட்டேன். தான் தன வைசிய ஊழியன்’ என்ற பத்திரிகையின் தொடக்க கால ஆசிரியராக இருந்ததையும் இப்பத்திரிகை நாளடைவில் ஊழியன்’ என்ற பொதுப் பெயரோடு வெளிவந்ததையும் கூறினார் சொ. முரு, ஊழியன் பத்திரிகையிலிருந்து குமரன்' பத்திரிகையைத் தொடங்கியதாகக் கூறினார். ஒரு கட்டத்தில் குமரனுக்கும் ஊழியனுக்கும் இடையில் பலமான போட்டி இருந்ததையும், இரண்டு பத்திரிகை களிலும் தேசிய உணர்ச்சியிலும் சீர்திருத்த உணர்ச்சியிலும் ஒற்றுமை கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார். அதன் பிறகு அவரிடம் விடைபெற்றுக் கொண்டு காரைக்குடி திரும்பினேன். கினைவு-2 : பல்வேறு காரணங்களால் நான் சொ. முரு. வை அடிக்கடிச் சந்தித்து உரையாடியதுண்டு. ஒரு சமயம் அவர் சொன்னார் : ரெட்டியார், ராய. சொ. இப்போது சிவமணி' ; சிவம்பெருக்கும் சீலர் , இதற்கு முன்னே நான் சிவ வேடத்துடன் தேவாரப் பாடல்களைக் காதலாகிக் கசிந்துருகிப்’ டா டி. சைவத்தைப் பரப்பியிருக்கின்றேன். ரெட்டியார், ஒன்று சொல்வேன். நாளொன்றுக்கு ஐந்து பலம் விபூதியைக் கொண்டு மேனியெல்லாம் பட்டை தீட்டிக் கொண்டு சைவப் பிரசாரம் செய்த காலம் ஒன்றுண்டு. என் வாழ்