பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 மலரும் நினைவுகள் நாளில் நான் பூசிக் கொண்டது இரண்டு மூட்டை விபூதி இருக்கும். பிறகு அதையெல்லாம் கைவிட்டேன். இப்போது என்னைப் பார்க்கும், என் நிலையை நோக்கும் தங்கட்கு இது வியப்பாகவே இருக்கும்! பிள்ளையார் பக்தி கூட என்னிடம் அதிகமாகவே இருந்தது' என்றார். காரைக்குடி வாழ்வில் சொ.முரு.வின் சிவம் பெருக்கும் சீலத்தைப் பற்றிப் பல அன்பர்கள் என்னிடம் சொல்லிய துண்டு. ஏன் ராய. சொ.வே முருகப்பரின் பழைய "சைவப் பற்றைப் பற்றி ஒரு தடவை பேச்சுவாக்கில் இடைப் பிறவரலாகச் சொல்லி மகிழ்ந்திருக்கின்றார்கள். இந்நிலையில் சைவப் பற்று' என்ற தலைப்பில் மடாதிபதி களின் செயலைக் குத்திக் காட்டும் பாவேந்தரின் பாடலும் நினைவிற்கு வருகின்றது. கினைவு-3 : என் அருமை நண்பர் திரு. P. அரங்கசாமி ரெட்டியார் (வழக்குரைஞர்) அவருடைய திருக்குமாரனை (நான்காவது மகனை) மகளிர் இல்லச் சிறுவர் பள்ளியில் சேர்ப்பதற்காக நானும் திரு. ரெட்டி யாரும் மகளிர் இல்லம் சென்றிருந்தோம். திரு. ரெட்டியார் தந்தை பெரியாரிடம் மிக்க தொடர் புடையவர். அவர்தம் கொள்கைகள் இவருக்கு நன்கு பிடிக்கும்' என்று சொல்லி வைத்தேன். அவ்வளவுதான்; தம் கதையைத் தொடங்கிவிட்டார் முருகப்பா. 'ரெட்டியார்வாள், சைவத்தையும் 'பூச்சாண்டிக் கோலத்தையும் கைவிட்ட பிறகு, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்னைக் கவர்ந்தது. அதில் சேர்ந்து ஈ. வே. ரா. வுடன் நெருங்கிய தோழமை கொண்டேன். அவர்தம் கொள்கைகளை பிரசாரம் செய்து வந்தேன். கைம்பெண் திருமணத்தை ஆதரித்துப் பேசினேன். அவர்கட்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று முழங்கின காலம் ஒன்றுண்டு. சமூகச் சீர்த்திருத்தத் தையே என் மூச்சாகவும் பேச்சாகவும் கொண்டிருந்தேன். பட்டுக்கோட்டை சுயமரியாதை மாநாட்டில் கைம்பெண்