பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா ○45 மணத்தை ஆதரித்துப் பேசினேன். அப்போதுதான் இந்த அம்மையாரிடம் (அருகில் இருந்த மரகதவல்லியைச் சுட்டிக் காட்டி) மாட்டிக் கொண்டேன்' என்று சொல்லிச் சிரித்தார். இன்னும் கதையைக் கேளுங்கள்' என்று மரகதவல்லி அம்மையார் சீண்டினார்கள். முருகப்பா தொடர்ந்து கைம்பெண்கட்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று பேசி முடிக்கும் சமயத்தில் ஒர் இளம் பெண் (இந்த அம்மையார்தான் என்று சுட்டிக் காட்டி) கூட்டத்தினின்றும் எழுந்து வந்து ஒலி வாங்கியைப் (Mike) பிடித்துக் கொண்டு, செட்டியார் முழங்கிவிட்டார். இங்ங்னம் கட்சிக் கூட்டங்களில் வாய்ப்பந்தல் போடுபவர் களை நிறையப் பார்த்திருக்கின்றேன். நான் கன்னி கைம்பெண் (Virgin widow). செட்டி பார் ஆண் மகனாக இருந்தால் என்னைக் கை பிடிப்பாரா?' என்று சவால் விட்டார்கள். எனக்கு மட்டும் ரோஷம் இல்லையா? என்ன? எதிர் சவால் விடுத்தேன் கை பிடிப்பதற்குத் தடை இல்லை என்று. எங்கள் திருமணம் திருப்பரங் குன்றத்தில் தந்தை பெரியார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது” என்று கூறினார். முருகனுக்கும் தெய்வயானைக்கும் மரபு முறைப்படித் திருப்பரங் குன்றத்தில் நடைபெற்றதாகக் கந்த புராணத்தில் படித் திருக்கின்றேன். முருகன் வள்ளியை மணந்ததுபோல் (காதல் முறையில்!) இந்த முருகப்பர் மரகதவல்லியை மணந்து கொண்டார் போலும்!'" என்று ஒரு புராண உண்மையைக் கூறினேன். எல்லோருமே என் நகைச்சுவை குறிப்பைக் கேட்டு மகிழ்ந்தார்கள். நினைவு-4 : எந்த ஆண்டு என்று நினைவு இல்லை. காரைக்குடிக் கம்பன் திருநாளில் கம்பனின் சிறு பாத் திரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு சொற்கோவை நிகழ்ச்சி இருந்தது. அதில் பரதனைப் பற்றி சொ. முரு. அவர்கள் பேசியதாக நினைவு. அவர் பேசின. அந்த உருக்கமான பேச்சு இன்றும் என் நினைவில் பசுமையாகவுள்ளது.