பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 மலரும் நினைவுகள் மன்னன் தந்த வரம் ஒன்றினால் இராமனை வனத்திடைப் போக்கினேன்; மற்றொன்றினால் பார் உனக்காக்கினேன். இதைப் பொறுக்கலாற்றாது மன்னன் தன் உயிர் நீக்கி னான்’ என்று கைகேயியின் சொல் செவிப்படுவதற்கு முன்னர், பரதனின் கைகள் செவியைப் பொத்திக் கொண்டன; புருவங்கள் கூத்தாடின; மூச்சினிடையே தீச்சுவாலைகள் வெளிப்பட்டன; கண்கள் குருதியை உமிழ்ந்தன. கன்னங்கள் துடித்தன; உடலின் மயிர்த், தொளைகள் தொறும் அனற் கொழுந்துகள் அரும்பின. வாய் மடித்துக் கொண்டது. கைகள் இடியும் அஞ்சும்படி ஒன்றோடொன்று அடித்தன. இவ்வாறு சினத்தினால் சீறி நின்ற பரதன் இராமன் முனிவான் என்று அன்னையைக் கொல்லாது கடிந்து கூறுகின்றான். " உன்னுடைய சூழ்ச்சியினால் எந்தை மாண்டனன்; எம்முன் மாதவம் பூண்டனன். இவ்வாறு வரம் பெற்ற நின் வாயைக் கிழித்தெறியாமல் இருந்தால் நின் செயலுக்கு உடன்பட்டவனாக வன்றோ உலகத்தாரால் கருதப் பெறுவேன்? வாய்மையைக் காக்க மாளவும் ஒரு மன்னன் உள்ளான்; ஆள வேண்டிய அரசை ஆளாமல் கானகம் செல்லவும் ஒரு வீரன் உள்ளான்; தன் தாய் விரும்பித் தேடிய பூமியை ஆளவும் பரதன் என்ற ஒருவன் உள்ளான்-இப்படி ஒரு நிலை உண்டானால் அறநெறி எங்கே போயிற்று? சூரிய குலத்தில் மூத்தவன் ஆளும் மரபு கெடும் வண்ணம் நான் அரசினை மேற்கொண்டால் அந்தச் சூரிய குலத்திற்கே ஒரு பழி உண்டாகி விடுமே. வரம் என்ற ஓர் உபாயத்தை மேற்கொண்டு கற்பொழுக்கத்திற்கு மாறாகக் கணவன் உயிரைக் கொள்ளை கொண்டாய். நீ கணவன் உயிருண்ட நோய் அல்ல; கணவன் உயிர் கொண்ட பேய்; அதனால் தான் இன்னும் உயிரோடு இருக்கின்றாய். இன்னும் என்ன செய்யப் போகின்றாயோ? பாலனாக இருக்கும்போது பாலூட்டி வளர்த்தாய். இப்போது கொடிய பழியைத் தந்துள்ளாய். இன்னும் என்ன தரப் போகின்றாயோ?