பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா 347” இராமன் கானகம் செல்லுவதற்குப் பரதன் உடந்தை யாயினான் என்ற பழிமொழிக்கு மூலம் நின் வயிற்றில் பிறந்தமையே காரணம், உலகோர் பழிக்கு ஆளான மனத் துயரம் தீர்வதற்கு மூவுலகோரும் காண்பதற்குரிய தவத்தை மேற்கொள்வேன். அதுபோல நின்பழியைத் தீர்த்துக் கொள்வதற்கு நீ நின்னுயிரைத் துறத்தலே உற்ற வழியாகும், இனி, நின் முகத்தில் விழித்தலே பெரும் பாவம். என்று சொல்லி தூய உள்ளத்தையுடைய கோசலை இருக்கும் இடம் ஏகினான். குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது (குறள்-29) சொ. முரு. பேசிய சொற்களை அப்படியே எழுத முடிய வில்லை . முன்னர் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு, பின்னர் சைவ சமயப் பிரசாரத்தில் மிக ஈடுபாடு கொண்டு, அதன் பின்னர் அதனைக் கைவிட்டு பெரியாரைத் துணைக்கோடல்’ என்பதைப் பின்பற்றி தந்தை பெரியாருடன் தோழமை கொண்டு அவர் கொள்கையைப் பரப்பி வந்த சொ. முரு. வின் வாழ்க்கையை நோக்கும்போது, எல்லாப் பொரு ளுக்கும் தலைமையான பரத்துவம் எது?’ என்பது பற்றி ஆராயத் தொடங்கி, உலகாயதம், பெளத்தம் சமணம் முதலிய அவைதிக சமயங்களுள்ளும் மாயாவாதம், சைவம் முதலான சமயங்களுள்ளும் ஒவ்வொன்றிலும் தனித்தனியே புகுந்து ஆராய்ந்து தொடங்கிய பக்திசாரர் என்ற திருமழிசையாழ்வார் நினைவுக்கு வருகின்றார். சொ. முரு. குறிக்கோள் எதுவுமின்றி உலக வாழ்வில் அலைந்து திரிந்தவர்; மழிசையார் பாரமார்த்திகக் குறிக் கோளை நாடித்திரிந்தவர். இதுவே இவர்களிடையேயுள்ள தலையாய வேற்றுமை நினைவு-5 : ஒரு சமயம் மகளிர் இல்லப் பள்ளியில் பயின்று வரும் தன் மகனைப் பார்ப்பதற்காகத் திருச்சி