பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா $4.9 கின்றார். கம்பனுக்கு மேலான கவிஞர் தமிழகத்தில் இல்லை என்பதை உணர்ந்து பிரசாரம் செய்யும் நிலை யிலும் இறங்கி விடுகின்றார். இரசிகமணி டி. கே.சி. யைப் போல் கம்பராமாயணத்தில் புதர்கள்போல் மண்டிக் கிடக்கும் செருகுகவிகளை நீக்குவதற்குத் தம்போக்கில் வழி வகுக்கின்றார். இரசிகமணி டி. கே.சி.யைப்போல் பாடலைத் திருத்தவில்லை. பல பதிப்புக்களிலுள்ள (சிறப் பாக வை.மு. கோ. பதிப்பை அடிப்படையாகக் கொண்டு) நல்ல பாடல்களை மட்டிலும் தேர்ந்தெடுத்து உரைக் குறிப் புடனும் பொருத்தமான முகவுரையுடனும் வெளியிடத் திட்டம் தீட்டினார். இத்திட்டத்தின்கீழ் பால காண்ட மும், அயோத்திக்காண்டமும் வெளிவந்தன. பாலகாண்டம் இராய. சொவுக்கு உரிமையாக்கப் பெற்றது. அயோத்திக் காண்டம் யாருக்கு உரிமையாக்கப் பெற்றது என்பது நினைவில்லை. ஏனைய காண்டங்களில் உள்ள பாடல்களின் பரிசோதனையும் நிறைவு பெற்றது. நினைவு-7 : பால காண்டம் நூலுக்கு வெளி யீட்டு விழா ஒன்றை ஏற்படுத்தினார், சொ. முரு. விழா காரைக்குடி மீனாட்சி சுந்தரேசுவரர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. (இந்தப் பள்ளியின் பின் புறமுள்ள பள்ளிக்குரிய விளையாட்டுத்திடலில் பெரிய காவணம் அமைத்து பதினைந்து ஆண்டுகட்கு மேல் சா. க. ஏற்படுத்திய கம்பன் திருநாளின் மூன்று நாட்கள் விழா நடை பெற்று வந்தது. கம்பன் மணி மண்டபம் நிறுவப் பெற்ற பிறகு விழா நிகழ்ச்சிகள் மணிமண்டபத்தில் நடை பெற்று வருகின்றன). இந்த வெளியீட்டு விழாவில் நூலை வெளியிட்டார் வள்ளல் இராம. அழகப்பர்; விழாவுக்குத் தலைமை வகித்தவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை என்பதாக நினைவு. சொ.முரு.தம் துணைவியார் மரகதவல்லி அம்மையார் வசமிருந்த 150 சவரன் எடை யுள்ள தங்க நகைகளை உருக்கி நகாசு வேலைப்பாடுள்ள அட்டையாக்கினார். பால காண்டம்’ என்ற நூலுக்கு.