பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35む மலரும் நினைவுகள் இந்தச் செயலைக் கண்டு பலர் வியந்தனர்; சிலர் ஐயுற்ற னர்; சிலர் கிண்டல் செய்தனர். இதனால் சொ. முரு. தாம் கம்பனிடம் கொண்டிருந்த ஈடுபாட்டைத் தூலமாக எடுத்துக் காட்டினார் என்று தான் எனக்குத் தோன்று கின்றது. நூலை வெளியிட்ட வள்ளல், "இந்த நூலை வெளியிடுவதால் நான் தான் சொ. முரு.வுக்கு 互 50 சவரன்களை அளித்திருக்கக் கூடும் என்று உங்களில் பெரும் பான்மையோர் கருதலாம். உண்மை அதுவல்ல.சொ.முரு. தான் தம் குடும்பவசமுள்ள தங்க, நகைகளையெல்லாம் உருக்கிக் கம்பனுக்குக் காணிக்கையாக்கி உள்ளார். என்று பலர் கொண்டிருந்த ஐயத்தைப் போக்கினார். கூட்டம் முடிந்தவுடன் தனிமையில் செயற்படுவது அவரவர் விருப்பம்.இராய. சொ. திருவாசகத்தை பூசையில் வைத்து வணங்குகின்றார்; நாவினாலும் பாடல்களை நவிற்றிப் பூசிக்கின்றார். இது தப்பா? அப்படியே சொ. முரு. வும் கம்பன் பாடல்களில் மனத்தைத் பறிகொடுத்து உருகு கின்றார். தம் வசமுள்ள தங்கம் முழுவதைவும் பால காண்டத்தின் அட்டை மூலம் கம்பனுக்கே சமர்ப்பண மாக்கி அப்பெருங் கவிஞனைப் போற்றுகின்றார். நமக்குப் பொருந்தாத கருத்தைப் பேசாமல் இருப்பது நல்லது' என்று கூறிக் கிண்டல் செய்தவர்களின் வாயை அடக்கி னார் கம்பனடிப் பொடி சா. க. நினைவு-8 : கம்பனில் செருகு கவிகளாகத் தாம் கருதுவனவற்றைச் சொ.முரு. அவர்கள் நீக்கிய முறையைப் இனி உரைக்கில் பாரதமாக விரியுமாதலால் ஒன்றிரண்டு காட்டுகளுடன் நினைவை அடக்கிக் கொள்ளுகின்றேன். (1) திருமுடிசூட்டுப் படலத்தில் ஒரு பாடல் : வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற, வெற்றிப் பாசிலை மகளிர், அன்னார் ஆடையைப் பரிந்து சுற்றது