பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ேதிருத்தச் செம்மல் சொ. முருகப்பா 351 வாசமென் கலவை சாந்து என்று இனையன மயக்கம் தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்து ளோரும் திருமுடி-13 இராமன் காட்டிலிருந்து அயோத்தி நகர் வந்து முடிசூடு கின்ற எல்லா ஏற்பாடுகளும் நடை பெற்றுக் கொண்டிருந்த சமயம். விலை மாதர்களின் வீடுகளில் பிராமணரெல் லாரும் குவிந்து நிர்வாணமாகக் கிடக்கின்றார்கள். இராம னுக்கு பட்டம் என்ற செய்தி இவர்கள் காதுக்கு எட்டு கின்றது. மகிழ்ச்சி மண்டைக்கு கொண்டு போய் விடு கின்றது. உடனே வெளியில் புறப்படுகின்றார்கள். அவர்களும் விலை மாதர்களும் தத்தம் கைக்கு அகப்பட்ட துணிகளை எடுத்துச் சுற்றிக் கொண்டு ஒடுகின்றனர். அந்தக் காட்சியை வருணிப்பது இந்தப் பாடல். விலை மாதர் உடுத்திக் கொண்டிருந்த சேலையை அந்தணர் களும் அந்தணர் உடுத்திக்கொண்டிருந்த (எட்டு முழம்) வேட்டியை விலை மாதர்களும் மாற்றி உடுத்திக் கொண்டு தெருவிற்கு வந்து விடுகின்றனர்! இராமனைக் காண்பதி லுள்ள ஆர்வமும் விரைவும் இப்படி ஒரு மாறாட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது! இது மட்டுமா? எதிர் கொள்வதி லுள்ள விருப்ப மேலீட்டால் வாசக்கலவைச் சாந்துகளைப் பூசிக் கொள்ளாமலேயே வந்தவரும் வாசக்கலவைச் சாந்துகளைப் பூசியவரோடு நெருக்கி உரசுதலால் பூசிய வர்களின் வாசக்கலவைச் சாந்து தம்மீது இழுசிக் கொள்ள, வாசக்கலவை பூசி வந்தவரினும் இருமடங்கு வாசக்கலவைச் சாந்தை உடையவரானார்கள். இந்தப் பாடலும் கல்வியிற் பெரிய கம்பர் வாக்குதான் என்று கொள்வதில் என்ன அசம்பாவிதம்: கம்பர் பெருமானின் பெருமைக்கு எப்படிப்பட்ட இழுக்கு? (2) செருகு கவியாகக் கொள்ளப்பட்ட இன்னொரு பாடல். இது வாலிவதைப் படலத்தில் வருவது :