பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா 8ጛ፰ அம்பைப் பிடுங்கினான் (67). பிடுங்கிய வாளியை ஒடிக்க முயன்றான்; முடியவில்லை (70), இருகைகளையும் நீட்டித் தம்பியைக் கட்டித் தழுவினான் (131). மகனைப் பற்றி நெஞ்சில் அனைத்துத் தழுவினான் (131). தன்னு டைய இரு கைகளாலும் மகனைப் பிடித்து மார்பில் சேர்த்துத் தழுவினான் (150). பின்னர், தனயனை "உனக்கு அடைக்கலமாவான்’ என்று இராமனிடம் சொல்லுகின்றான் (151). வீடுபேறு பெறுகின்றான் (152). இத்தனை நிகழ்ச்சிகட்குப் பிறகு வருகிற பாடலில் (153) அம்பைப் பிடித்திருந்த கை இப்பொழுதுதான் நழுவினதாகவும் உடனே அம்பு உடலை உருவிப் பின்புறம் போய், கடலில் முழுகித் தேவர்களிடத்தில் ஆசிபெற்று இராமனின் அம்பு அறாத் துரணியில் வந்து நுழைந்த தாகவும் கூறப்பெறுகின்றதே, இஃது எவ்வளவு அசம்பா விதம்? சிறியன சிந்தியாத மாபெரும் வீரனான வாலியின் முதுகில் புண்தோன்றும்படி ஒரு நிகழ்ச்சி ஏற்படுமா? இராமன் எய்தாலும் அம்பு செல்லுமா? அம்பு சென் றாலும் கம்பர் விடுவாரா?' -என்பவை சொ. முரு. அவர்கள் விடுக்கும் விடை காண முடியாத வினாக்கள். நினைவு-9 : இது சோகமான நினைவு. ஒரு நாள் சொ. முரு. அவர்களைப் பார்க்கும்போது அவர் உடல் நிலை குன்றியிருந்ததைக் கண்டேன்; உள்ளமும் சோர்ந் திருந்தது. ரெட்டியார்வாள், நான் இனி நீண்ட நாள் இருக்க முடியாது என்பதை உணர்கின்றேன். மரகத வல்லிக்கு முன்னர் நான் இறந்தால் அம்மையாரின் நிலை அதோகதிதான். சின்ன வீடு' என்று அவர்களை வீட்டை விட்டு வெளியில் தள்ளி விடுவார்கள் நகரத்தார்கள். என் னுடன் பல்லாண்டுகள் சேர்ந்து வாழாது அவர் அன்னையார் வீட்டில் வாழும் என் முதல் மனைவியை வீட்டிற்குள் கொணர்ந்து விடுவார்கள். என்ன செய்வது?’’ என்று அழாத குறையாகச் சொன்னார்கள். இத்தகைய ம நி-23