பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ54 மலரும் நினைவுகள் நிகழ்ச்சியொன்றை இன்னோர் இடத்தில் நேரில் கண்டு அறிந்திருந்த படியால் இந்நிலை எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. வழி காணலாம்' என்று ஆறுதல் கூறினேன். திருச்சி வழக்குரைஞர் P. அரங்கசாமிரெட்டியாருக்குத் தந்தி அனுப்பி வரவழைத்தேன். மூவரும் கலந்து யோசித்தோம், சொத்துகளையெல்லாம் அம்மையார் பேருக்கும் ஒரே மகன் வீரபாண்டியன் பேருக்கும் (முதல் மனைவி மூலம் குழத்தை இல்லை) எழுதி வைத்து விடுவ தென்றும், இவ்வாறு எழுதி வைக்கப்பெறும் பத்திரம் சென்னையிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இருவரும் சென்னைக்கு உடனே குடியேறி விடவேண்டும் என்றும் முடிவு எடுத்தோம். இம்முடிவின்படியே காரியங்கள் விரைவாக நடைபெற்றன. சென்னையில் தங்கின இடம் எனக்குத் தெரியாது. வழக்குரைஞர் ரெட்டியாருக்குத் தெரியுமா? என்பதையும் அறியேன். குடியேறிய சில திங்களில் சொ. முரு. திருநாடு அலங்கரித்த செய்திதான் எனக்கு எட்டியது. சென்னை யில் அவர் பூத உடல் எங்கு எரியூட்டப் பெற்றது என்பதும், சடங்குகள் நடைபெற்ற இடங்களும் என்னால் அறியக் கூடவில்லை. வழக்கமாகச் சென்னை வாழ் நகரத்தார் செய்துவரும் பட்டினத்தார் அடக்கமான திருவொற்றி யூரில்தான் இறுதிச் சடங்குகள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், காரைக்குடியில் ஆச்சி தங்கியிருந்த இல்லத்தில் நடைபெற்ற சடங்குகளில் கலந்து கொண் டேன். ஒடுவிழுந்து சீப்பாயும் ஒன்பதுவாய்ப் புண்ணுக்கு இடுமருந்தை யான்அறிந்து கொண்டேன்-கடுஅருந்தும்