பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் தோன்ற புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று (குறள்-236) ‘கர்னனுக்குப் பின் கொடையும் இல்லை என்பது தமிழகத்தில் வழங்கும் பழமொழி; இம்மொழி பாவலர் வாயிலும் பாமரர் வாயிலும் தாண்டவமாடும். இவன் கொடுத்து கொடைகளிலெல்லாம் தலைசிறந்தவை இரண்டு. ஒன்று இந்திரனுக்குத் தன் உயிரனைய கவச குண்டலங்களை ஈந்தமை, மற்றொன்று உற்றபெரு நல் வினைப் பேறு அனைத்தையும் வேதியனாக வந்து வேண்டிய பார்த்தன் தேரூர்ந்த பரந்தாமனுக்கு நல்கியது. இந்த இரண்டு கொடைகளே மேற்குறிப்பிட்ட பழமொழிக் குக் காரணமாயிற்று: ஏனைய கொடைகள் யாவும் எல்லோரும் வழங்கும் கொடைகளாதலால், அவை அவ் வளவாக அக்காலத்து மக்கள் மனத்தை ஈர்க்கவில்லை. வள்ளல் அழகப்பரோ தனக்கென வாழாத் தகை சான்ற பெருந்தகை. ஈத்துவக்கும் இன்பத்தின்’ எல்லை யைக் கண்ட பெருமகனார். ஒன்றுக்கும் உதவாத காரைக்குடிக்கருகிலுள்ள ஆயிரக்கணக்கான பொட்டல் நிலத்தை தரிசுக் காட்டை)ப் பல்வேறு பள்ளிகள், கல்லுரரி கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் எழும்படிச் செய்த மேதை. காரைக்குடி வழியாகச் செல்லும் இருப்பூர்திகளில் செல்