பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 36 ፫ தார்; அவற்றை கல்லூரிச் சின்னத்தில் பொறித்தார். வள்ளல் தமிழில் இக்குறிக்கோளை அமைப்பதற்கு உறுதுனையாக இருந்தவர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன். கல்லூரி தொடங்கப் பட்டபோதே அறிவியல் படிப்புக்கு முன்னுரிமை அளித்தார் வள்ளல். தொடங்கப்பட்டபோதே இயற்பியல், வேதியியல், விவங்கியல், தாவர இயல், நிலஉட் கூற்றியல் (Geology)3ஆக ஐந்து துறைகளும் சேர்ந்தாற்போல் தொடங்குவதற்கு வழி வகுத்தார். இப்பாடங்களை நடத்துவதற்கு வெறுங்கையால் முழம் போட முடியாது. ஆதலால் இரவும் பகலுமாகக் கட்டடங்களைக் கட்டி முடித்தார்; தளவாடப் பொருள்களை வாங்கிக் குவித்தார். இவற்றிற்குப் பிறகுதான் பிற கட்டடங்கள் வேலை தொடங்கப் பெற்று அசுர வேகத்தில் நிறைவு பெற்றன. இந்த விரைவுப் பணியை நேரில் கண்டு வியந்த டாக்டர் வ. சுப. மாணிக்கனார், வெள்ளி விடியுமுன் வீறு சால் கட்டடங்கள் உள்ளும் உயரம் உயர்த்துவான்-நள்ளிரவும் மின்விளக்கம் வைத்து மிகவிரைந்து கட்டினான்; பொன்விளக்கம் கண்ட புதிர்." என்ற பாடலால் பாராட்டுகின்றார். காரைக்குடியில் நான்பணியேற்றபோது அறிவியல் பகுதிக் கட்டடங்கள் முடிக்கப் பெற்றிருந்தன. 1950-க்குப் பிறகு எழுந்த 3. இந்தப் பாடத்திற்குரிய கட்டடத்தின் ஒரு பகுதி யில்தான் அழகப்பா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி (ஜூலை 1950) தொடங்கப் பெற்றது. அடுத்த ஆண்டு முதல் தனிக் கட்டடம் அமைக்கப் பெற்று அங்குக் குடி புகுந்தது. 4. கொடை விளக்கு - 97