பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.2 மலரும் நினைவுகள் கட்டடங்களின் துரிதமான வேலைகளை நேரில் கண்டு களித்தேன். அரசு கூட இவ்வளவு விரைவாகக் கட்ட (էքւգ աո Յա. காரணம் சிவப்பு நாடா தடை உள்ளதே! பாண்டவர்க்கென விசுவகர்மா என்ற தேவதச்சனால் இந்திரப் பிரத்தம் அமைத்ததைப் பாரதம் விரித் துரைக்கும். வில்லிபுத்துாரார், 'இமையவர் பதியில் உள்ளன யாவும் இங்குள; இங்கு மற்(று) உள்ள அமைவுறு பொருள்கள் அங்(கு)இல’ எனுமாறு அமைத்தவான் தொல்பதி அழகைச் சமைவுற விரித்துப் புகழ்வதற்கு உன்னில், சதுர்முகத் தவனும்மெய் தளரும்; நமர்களால் நவில முடியுமோ? முடியாது." என்பார். பல்லாண்டுகட்கு முன்னர் தொடங்கப் பெற்று இயங்கி வரும் தொல் புகழ்க் கல்லூரிகளிலெல்லாம் "நம்மிடம் கூட இல்லாத தளவாடப் பொருள்கள் அழகப்பா கல்லூரியில் உள்ளனவே? என்று வியக்கும் வண்ணம் ஆய்வகங்கள் (Laboratories) அமைந்திருந்தன. அறிவியல் பாடங்களை கற்பிக்கும் வசதிகள் குறித்து இப்படிப் புகழ் பெற்றது அழகப்பா (கலைக்) கல்லூரி. மின்சார- வேதியியல் ஆராய்ச்சிக் கழகம் காரைக் குடியில் அமைப்பதற்குப் போதிய நீர் வசதி இல்லை என்ற தடை எழுப்பிப் பெற்றது. தில்லியில். வள்ளல் பொட்டல் காட்டில் பெருங்கிணறுகளைத் தோண்டி நீர் உண்மையை நிதர்சனமாகக் காட்டி அனைவரையும் வியக்க வைத்தார். "ஓங்கி உலகளந்த உத்தமனின் திருவடிகளைத் தன் கமண்டல நீரினால் நான் முகன் கழுவியதால் அது கங்கை யாகப் பெருகி உம்பர் உலகில் பாய்ந்து கொண்டிருந்தது. مہم سبیمیسسس-سم 5. வி. பா. இந்திரப் பிரத்தச் சருக்கம்-14