பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 8Ꮛ 3: திலீபனின் குமாரனான பகீரதன் தன் மூதாதையார் கபில முனிவரின் சாபம் பெற்ற வரலாற்றை வசிட்ட முனிவராலுணர்ந்து அவர்கள் நற்கதியடையப் பல்லாயிர ஆண்டுகள் நான்முகனை நோக்கித் தவம் புரிய நான்முகன் தரிசனம் தந்து சிவபெருமானையும் கங்கையையும் நோக்கிப் பல நூற்றாண்டுகள் தவம் புரியுமாறு பணிக்க, அங்ங்னமே தவம் புரிந்து கங்கையை நிலவுலகிற்குக் கொணர்ந்தான். மேலுள்ள பொருளைக் கீழே கொணர்வது எளிது. இதற்காகப் பகீரதன் பல்லாண்டுகள் தவம் புரிய வேண்டியிருந்தது. ஆனால் வள்ளல் அழகப்பர் தம்முடைய பண பலத்தால் சில திங்களில் கீழுள்ள நிலத்தடி நீரை மேலேற்றிப் பூமிக்குக் கொணர்ந்தனர். பகீரதப் பிரயத்தனம்' என்ற உவமை இவர்தம் முயற்சிக்குப் பொருந்தாது போயிற்று. அழகப்ப ரின் முயற்சி என்ற உவமை வழங்குவதாயிற்று. வள்ளல் அழகப்பர் நன்றிணர்வு மிக்கவர். தாம் நிறுவிய விளையாட்டரங்கிற்கு (Stadium) தமிழக ஆளுனராக இருந்த பவநகர் பெயரால் பவககர் ஆடரங்கு” எனப் பெயரிட்டனர்; கண் போல் வளர்த்த பூங்காவிற்கு 5ேரு பூங்கா (சவகர் சோலை) எனத்திருநாமமிட்டு வழங்கினார். மாணாக்கர் விடுதிகட்கு தன் அன்னையார் 6. கபிலர்-திருமாலின் அம்சம். இவர் பாதாளத் தில் தவம் செய்திருக்கையில் இந்திரன் சகர புத்திரர்களை வஞ்சித்து அசுவமேத யாகக் குதிரையை இவருக்குப் பின் புறத்தில் கட்டினான். குதிரையைத் தேடி வந்த சகர புத்திரர்கள் கபிலரை ஐயுற்று அவரை வருத்தினர். முனிவர் சினந்து விழித்தனர். அவரது சினத்தியிற்கு இவர்கள் நீறாயினர் என்பது வரலாறு. இவர்தம் சாம்பர் கங்கையில் பாய்வித்தற்காகவே கங்கையை நிலவுலகிற்குக் கொணர்ந்தனன் பகீரதன்.