பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 66 மலரும் நினைவுகள் மானவர்கள். செட்டி நாட்டுப் பகுதிகளில் உள்ள பெரும் புள்ளிகள் யாவரும் விருந்தில் கலந்து கொள்வார்கள். பாலைவனம் போல் கல்லும் முள்ளும் நிறைந்த இந்தப் பொட்டல்காட்டில்இந்தியத்துணைக் கண்டத்தில் பல்வேறு இடங்களிலுள்ள பெரியார்கள் பலர் காரைக்குடிக்கு வந்து சிறப்பித்துப் போவதை யாவர்தாம் சிந்தித்திருப்பார்கள்? பொது மக்கள் கனவிலும் காணமுடியாத நிகழ்ச்சிகளை நனவாக்கிய பெருந்தகை வள்ளல் அழகப்பர். பருந்தும் பறவாப் படுசுரத்து நாளும் விருந்து தலைவர்க்கு வேட்டான்:-மருந்தினை ஊணாக வாங்கி உடலைக் கெடுத்தொழிந்தான் பூணாகக் கொண்டான் புகழ் ." என்று இதனைப் புகழ்ந்துரைப்பர் டாக்டர் வ. சுப. மாணிக்கனார். இப்போது அன்று வந்த பெரியார்களை நினைவு கூர்ந்தால் இந்தியப் பிரதமர் பண்டித சவகர்லால் நேரு, குடியரசுத் தலைவர் பாபு இராசேந்திரப் பிரசாத், துணைத் தலைவர் டாக்டர் சர்வே பல்லி இராதா கிருஷ்ணன், டாக்டர் ஆ. இலக்குணசாமி முதலியார், (அப்போது சென்னைப் பல்கலைக் கழகத்துணைவேந்தர்) இந்திய நிதியமைச்சர் டாக்டர் சிந்தாமணி தேஷ்முக், டாக்டர் இராஜகுமாரி அமிர்த கெளர், சர் சி.வி இராமன் டாக்டர் மோ. விசுவேசரய்யா (கர்நாடகம்) டாக்டர் மணவாள ராமாநுசன் (முன்னாள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் து ைண வே ந் த ர்) ஜ ஸ் டி ஸ் எஸ்.வரதாச்சாரி (முன்னாள் ஃபெடரல் மன்ற நீதிபதி) முதலிய பெரியார்கள் அவர்களுள் சிலர். ஒரு சமயம் ஆசாரிய வினோபா அவர்கள்கல்லூரிவட்டத்திற்கு வருகை புரிந்திருந்தார்கள். பயிற்சிக் கல்லூரி முற்றத்தில் மிகப் பெரிய காவணம் (பந்தல்) எழுப்பி மிகப் பெரிய வரவேற்பு நல்கப்பெற்றது. ஊர்ப்பெருமக்களும் சுற்றுப்புற வட்டாரப் பிரமுகர்களும் திரண்டு வருகை புரிந்திருந்தனர். 7. கொடை விளக்கு-39