பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் 367 ஆசாரியப் பெருமகனார் பூதான யக்ஞம் பற்றிச் சொற்பொழிவாற்றினார். இந்த ஏற்பாட்டை முன்னின்று நடத்தியவர் காரைக்குடி காந்தி சா. கணேசன் அவர்கள். பல க ல் லூ ரி க ைள த் தோற்றுவித்த வள்ளல் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவ ஆர்வங்கொண்டார். இஃது அவர்தம் திட்டங்களுள் ஒன்று. இதனை நிறை வேற்றுவதற்கு வேண்டும் தொடக்க முயற்சிகளையும் மேற்கொண்டார். இவர் திட்டத்தை ஆய்விற்காக ஏற்படுத்தப் பெற்ற அரசுக் குழுவும் இதற்கு உடன்பட்டது. மருத்துவக் கல்லூரி என்றால் அதில் பயிலும் மாணவர் கட்குப் பயிற்சிக் களமாக ஒரு பெரிய மருத்துவமனை வேண்டுமல்லவா? உமையாள் மருத்துவமனை' என்ற ஒன்று நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். அக்காலத்தில் நடுவண் அரசில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர்.இராசகுமாரி அமிர்தகெளர் 8-8-1954இல் அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை பயிற்சிக் கல்லூரிக்கு எதிரிலுள்ள மைதானத்தில் அமைய வேண்டும் என்பது வள்ளலின் திட்டம். இந்தக் கால்கோள் விழாவின் நினைவாக நடைபெற்ற இரவு விருந்து (Dinner) பயிற்சிக் கல்லூரியின் முற்றத்தில் நடைபெற்றது இன்றும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. இந்த விழாவின் போதுதான் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கெளர் காந்தியடிகள் வள்ளல் அழகப்பர் நோய் நீங்கி வாழ்க’ என்று ஒருநாள் மாலைத் தொழுகைக் கூட்டத் தில் இறைவனை வழுத்தியதாகக் கூறியது கேட்டார் அனைவரின் உள்ளத்தையும் நீர்ப்பண்டமாக நெகிழ்வித் தது. உமையாள் மருத்துவமனை தொடங்கப் பெறாமல் நின்று போய் விட்டது. அழகப்பா பயிற்சிக்கல்லூரி மாணாக்கர்கட்கு ஆய்வுக் களன்களாக அமைந்தவை அத்துணைப் பள்ளிகளும்.