பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔68 - மலரும் நினைவுகள் இவையாவும் பயிற்சிக் கல்லூரி முதல்வர் கண்காணிப்பில் நடைபெற்றன. குழந்தைப் பள்ளி (Nursery school) இல்லாத குறையொன்று இருந்தது. இதனைப் போக்கு வதற்காகவே வள்ளல் மாண்டிச்சோரிப் பள்ளியைத் தோற்றுவித்தார். இப்பள்ளியைத் தொடங்கி வைத்தவர் ஜஸ்டிஸ் எஸ். வரதாச்சாரியார். இவர் ஒய்வு பெற்ற ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி. மிகப் பழுத்த முதுபெரும் அறிஞர். ஆல்போல் தளிர்த்து அறுகு போல் வேரூன்றிய பெரிய குடும்பத்தைச் சார்ந்தவர்; குடும்பத்தின் வீட்டு மாச்சாரி போன்று நீண்ட ஆயுள் பெற்றுத் திகழ்ந்தவர். மாண்டிசோரி பள்ளியைத் திறந்து வைத்துப் பேசும்போது இவர் குறிப்பிட்டது : 'என் குடும்பம் மிகப் பெரியது. என் பேரப் பிள்ளைகளே அறுபதுக்கு மேற்பட்ட தொகை யினர். அவர்கட்கே தனியாக இத்தகைய பள்ளியொன்று இன்றியமையாதது. அந்தப் பள்ளியைத் திறந்து வைப்பது போல் இந்தப் பள்ளியைத் தொடங்கி வைக்கின்றேன்" என்று கூறிய போது கூடியிருந்தோர் எழுப்பிய கையொலி காதுகளுக்குப் பெருவிருந்தாக இருந்தது. இப்போது பேசப் படும் குடும்பக் கட்டுப்பாட்டை நினையாத காலம் அது. 1955 நவம்பர் 17 ஆம் நாள் கல்லூரி வளாகத்திற்குள் பலதுறைக் கல்லூரிகளின் சார்பில் பொருட்காட்சி (Exhibition) நடைபெற்றது. ஆயிரக் கணக்கான மக்கள்ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் சிறுமியரும்-வரிசை யாகவும் அமைதியாகவும் நின்று கண்டு களித்து அறிவு பெற்றனர். இதனை, பல்பொருட் காட்சி பரப்பி அறிவென்னும் கல்பொருள் மக்கட்குக் கற்பித்தான்;-நில்பொருள் ஈகையான் வந்த இசையென எண்ணினான்; வாகையான் வந்த வழி." என்று பாராட்டுவர் வ. சுப. மாணிக்கனார். அக்காலத்தில் மன்னர்களின் கொடையையும் பிற நற்பண்புகளையும் 8. கொடைவிளக்கு-117