பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 0. மலரும் நினைவுகள் ஆசிரியர்' என்று வள்ளலால் கொண்டாடி அழைக்கப் பெற்றவர். இத்தகைய பெரும் புலவரைத் தம் கல்லூரியில் ஒர் ஆராய்ச்சிப் பேராசிரியராக அமர்த்தி 1956-இல் "தமிழ் ஆராய்ச்சிக் கழகம்’ ஒன்றைத் தம் கல்லூரி வளாகத்தில் நிறுவ எண்ணி இருந்தார். ஏதோ இடர்ப் பாடுகளால் அப்போது அத்திட்டம் செயற்படாது நின்று போயிற்று. வள்ளல் மறைந்து" ஏழாண்டுகட்குப் பிறகு அவர் உட்கிடக்கையைத் தாளாளராக இருந்த திரு. gy.oT. W. வேங்கடாசலம் செட்டியார் நிறைவேற்றி வைத்தார். தமிழ்க்கடல் இரண்டு ஆண்டுகள் (1964-66) தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணியாற்றினார். இராசீபுரம் தமிழாசிரியர் மு. இராமசாமி தம் பணியில் விடுப்பு வாங்கிக் கொண்டு வந்து தமிழ்க்கடலுடன் உதவி ஆய்வாளராகத் துணை புரிந்தார். வள்ளலிடம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த மற்றொரு பெரும் புலவர் பண்டிதமணி .f # # ff" மகோபாத்தியாய மு. கதிரேசன் செட்டியார். வள்ளல் அழகப்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிக்கு ஐந்து இலட்சம் வெண்பொற் காசுகளை வழங்கினார். இதனைப் பாராட்டும் வகையில் கோட்டை யூரில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தைப் பண்டிதமணி சிறப்பித்தார்கள். அது முதல் வள்ளலுக்குப் பண்டிதமணியின் நட்பு ஏற்பட்டது; அது பெரிதாக வளர்ந்தது. பண்டிதமணியவர்களை வள்ளல் தம் வேப்பேரித் திருமாளிகைக்கு அழிைத்துத் திருக்குறள் பகுதிகளை ஒரளவு பாடம் கேட்டு அறிந்து கொண்டார். வள்ளுவம் வள்ளலுக்குத் தாம் செல்லும் நெறியை வழி யமைத்துத் தந்திருக்க வேண்டும் என்று கருதுவதில் தவறில்லை. 1952 அக்டோபர் 25ஆம் நாள் பாரத ரத்தினம் ச. இராசகோபாலாச்சாரியார் (அப்போது சென்னை மாநில 9. மறைவு 5-4-1957 (தோற்றம் 8-4-1999)