பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம, அழகப்பச் செட்டியார் 3.71 முதலமைச்சர்) காரைக்குடிக்கு எழுந்தருளினார். அழகப்பா கல்லூரிப் பேரவையில் உரை ஆற்றினார். சொற்பொழிவினிடையே பணம் சேர்க்கின்ற ஒரு வழியே பலருக்குத் தெரியும். சேர்த்த பணத்தை எல்லார்க்கும் பகுத்து வழங்குகின்ற மறுவழி ஒருவருக்கும் தெரியாது. இருவழியும் தெரிந்து தெளிந்தவர் வள்ளல் அழகப்பர். ஈத்துவக்கும் இன்பம் கண்ட மேதை' எனப் பாராட்டி னார். இதனைச் சுப. மாணிக்கனார், ஆக்கும் வழியே அறியும் உலகத்துப் போக்கும் வழியும் புரிந்தபெரு-நோக்கனெனப் பாரத ரத்தினம் பண்பிசைக்க வாழ்ந்தவன் ஊரதிர வீழ்ந்தான் உழைத்து.' என்று பாட்டாக வார்த்துக் காட்டுவார்.வள்ளல் கொடுத்த கொடையை அளவிட்டுக் காணவோ காட்டவோ இயலாது; வள்ளலே இதை அறியார் . வெளிப்படையாக பல நிறுவனங்கட்கு அளித்த கொடையை அந்தந்த நிறுவனங்கள் மூலம் அறியலாம். ஆயிரம், ஐயாயிரம், பதினாயிரம் என்று நண்பர்கட்கும் உறவினர்க்கும் நிலை யங்கட்கும் அளித்த கொடைகளை கணக்கிட்டுக் கூற இயலாது. தம்பெயரால் காரைக்குடியிலும் பிறவிடத்தும் நிறுவிய பல்வகைக் கல்லூரிகளும் பள்ளிகளும் பல. இவற்றிற்கு வழங்கிய இலட்சக்கணக்கான தொகை கணக்கிற்கு வராது. இதனால், கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வன்; தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன்; அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு.' என்று புலவரின் பாட்டில் இடம் பெறுகின்றார். வள்ளல் சில சமயம் கையிருப்பு இல்லாமலே சில விழாக்களில் 10. கொடை விளக்கு-17 11. டிெ-77