பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

裘7盛 மலரும் நினைவுகள் நன்கொடைத் தொகையை அறிவித்து விடுவார். பின்னர் அரும்பாடுபட்டு ஈட்டி வாய்க்கடனை ஈடுகட்டுவார். இது வள்ளலின் தனிப்பெரும் பண்பு. 'கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும், கொடுப்பாரிலை" (தேவா. 7-34:2) என்று பாடினார் தம்பிரான் தோழர் பாரியின் வண்மையை. எல்லாம் வழங்கிய பாரியிடம் பறம்பு மலை இருந்தது (புறம்-110) ஆனால், தாம் குடியிருந்த திருமாளிகையையும் வழங்கிய வள்ளல் அழகப்பரின் வண்மை பாரியின் வண்மையைவிடப் பெரிதன்றோ? இனிப்பாடும் பாட்டில் அழகப்பன் என்றே அழைப்பினும் கொடுப்பாரிலை’ என்றுதான் பாட வேண்டும். இருவரும் பாண்டி நாட்டைச் சார்ந்தவர்கள் தாமே? 1943-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டி. லிட். பட்டத்தையும் 1944இல் சென்னைப் பல்கலைக்கழகம் எல்.எல். டி. பட்டத்தையும் குடியரசுத் தலைவர் பதுமயூஷண் (தாமரை அணி) என்ற விருதையும் வழங்கி வள்ளலைச் சிறப்பித்த செய்தியை யான் காரைக்குடியில் பணியேற்றபின் அறிந்தவை. ஒரு சமயம் வள்ளல் அழகப்பர் பம்பாய் சென்றிருந்தார். தாம் தங்குவதற்கு ரீட்ஸ் என்ற விடுதிக்குச் சென்று ஒர் அறையைத் தருமாறு: கேட்டார். அந்த விடுதியின் டேலாளர் அறை காலி இல்லை என்று சொல்ல, வள்ளல் இந்த விடுதியில் எத்தனை அறைகள் உள்ளன?’ என்று வினவ, மேலாளர் "என்ன ஐயா, விலைக்கு வாங்குபவர் போலக் கேட்கின் நீரே?’ என்று கிண்டல் பாவனையில் பதிலிறுக்க, வள்ளல் ஆம்’ என்று விடையிறுத்து உடனே முன் பணமும் கொடுத்தார். பின்னர் அந்த விடுதியை விலைக்கு வாங்கிக் கல்லூரிக்கு நிதியாக வைத்தார் என்பது செவிவழிச் செய்தி. தமிழ்க்காதலர் திரு. தி. சு.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் தயாரிக்கப் பெற்ற