பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் டாக்டர் இராம. அழகப்பச் செட்டியார் ፪73 கலைக்களஞ்சியத் தொகுதிகளை வெளியிடும் தமிழ் விழாக்கள் பேரூர்களிலேயே நடைபெற்று வந்தன. இந்தத் தமிழ் விழா ஒன்றை 1955 செப்டம்பரில் அழகப்பா கல்லூரி வளாகத்தில் நடத்தத் தீர்மானித்திருந்தார். அவர் தம் தமையன் மறைவாலும் இப்பகுதியில் எழுந்த புயலா லும், பின்னர், தம்முடைய நோய் முற்றிய நிலையாலும் இவ்விழா இங்கு நடத்தப் பெறாமல் போயிற்று இந்த விழா நடந்திருந்தால் சிற்றுார்களில் விழா நடத்தும் பெருமையும் பெற்றிருக்கும் தமிழ் வளர்ச்சிக் கழகம். நம் அருமை இராஜாஜி அவர்களின் வேண்டுகோளின் படி தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழு அழகப்பா கல்லூரி யில் 30. 1. 1954இல் அமைக்கப்பெற்றது. அடியேனுக்கும் அதில் உறுப்பினர் பொறுப்பு வந்தது. ஒரு கூட்டம் நடை பெற்றது. வள்ளல் மறைந்த பிறகு அப்போது, நிதி-கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்த திரு. சி. சுப்பிரமணியம் வள்ளல் அழகப்பர் அறத்தின் தலைவரானார். இவர் காலத்தில் அரசின் ஆதரவில் ஒரு கலைச் சொல்லாக்கக் குழு அமைந்தது. அமைச்சர் என் திறமையை நன்கு அறிந்திருந்தும் அக்குழுவில் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போயிற்று. அமைச்சரும் வருந்தினார்: நானும் வருந்தி னேன். ஒரேர் உழவன்போல் நான் உழைத்துப் புகழ் பெறவேண்டும் என்பது இறைவன் திருவருள் போலும்! 4. 12. 1954 இல் வள்ளலைச் சென்னை அரசின் தொடக்க நிலைக் கல்விச் சீரமைப்புக் குழுவிற்குத் தலைவ ராக நியமித்தது அரசு. வள்ளல் நாடெங்கும் சுற்றிப் பல பள்ளிகள் செயற்படும் நிலைகளை நேரில் கண்டார். பல கல்வியாளர்கள், பெரியோர்கள், கல்வியதிகாரிகள் இவர் களை நேரில் சந்தித்து இவர்தம் சாட்சியங்களைப் பதிவு செய்தார். புதிய திட்டங்கள், யோசனைகள் அடங்கிய தம் அறிக்கையைச் சென்னை அரசிடம் 2. 10. 1955 இல் சமர்ப்பித்துப் பெரும் புகழ் பெற்றார். கல்லூரிக் கல்வி