பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苏警登 மலரும் நினைவுகள் யிலும் அதற்கு மேற்பட்ட கல்வியிலும் ஆழங்கால் பட்டிருந்த வள்ளல் இக்கல்வி கட்கெல்லாம் வேராகவுள்ள தொடக்க நிலைக்கல்விக் கொள்கைகளை வகுக்கவும் வள்ளல் வாய்ப்பு பெற்றது தமிழகத்தின் பெரும் பேறாக அமைந்தது என்று கருதலாம். 1954-ஆகஸ்டு 18 இல் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேருரை நிகழ்த் தினார். இந்தப் பொழிவில் முக்கியமாக வற்புறுத்தியவை: மனிதன் தன் சொந்த எண்ணத்தை அழிப்பதே பிழை. இற்றை நாளில் அவ்வெண்ணத்தை அழிப்பதோடு நில்லா மல், கல்வியின் பெயரால், எண்ணுதற்குரிய மூலநெஞ்சி னையே குழந்தை நிலை முதல் கெடுத்து விடுகின்றோம். மனிதன் உரிமையாக எண்ணவும், உரிமையாகப் பேசவும் சில வரம்புக்கு உட்பட்டு உரிமையாகச் செயலாற்றவும் வேண்டும். இவ்வுரிமைக்குத் தக்க செவ்வியை என்றும் காத்துக்கொள்ள வேண்டும். எத்துணைப் பெருஞ்செல்வமும் உரிமை கொடுக்கும் சூழ்நிலைக்குச் சமம் ஆகாது... அரசியலிலும் பிற துறைகளிலும் ஒரு தலைச் சார்பான கோட்பாடுகளையே மாணாக்கர் அறியும்படி மேற்படிப்புத் திட்டங் களை அமைத்தல் முடிவில் நாட்டுக்கே கேடு விளைவிப்ப தாகும். பிற நாட்டவரின் நற்கருத்துகளையும் தழுவிக் கொள்ளாது நமக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை’ என்று தற்பெருமை பேசித் திரிதல் அறிவினம். இந்த விழாவில் உரிமை வேண்டும் என்ற கொள்கையை விரித் துன்ரக்கும்போது திருநாவுக்கரசர் பெருமானின் "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்' என்ற பாடலை (தேவா. 6.98:1) மேற்கோளாகக் காட்டினது குறிப்பிடத்தக்கது. மாணவர்கட்கு மாண்வ மணிகாள்! வெற்றி பெறுவீர் வாழ்க்கையில். வினை புரிவீர். பெரி யோர்களின் அறிவுரையைப் போற்றுவீர். நம்மைப்பெற்ற நன்னாட்டுக்கு ஒல்லும் வகையெல்லாம் உதவுவீர். என்று