பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寧鞍臺 மலரும் நினைவுகள் பற்றி நினைக்க நேரம் ஏது? பக்தனது துயரம் என்ன? அதைப் போக்குவதற்கு வழி என்ன? அதைப் போக்குவதும் நம் கடமை தானே-என்றெல்லாம் தெரிந்து கொள்ளு கின்ற வயதா இது? சிறு பிள்ளை தானே அவன்?-என்று இதுகாறும் வாளா இருந்து விட்டோம். இப்போதல்லவா தெரிகின்றது இவன் வண்டவாளம்! நல்ல வயது வந்த ஆண்பிள்ளையாகத் தெரிகின்றான். மல்லுக்கு நிற்கக் கூடிய வயது. ஒருத்திக்கு இரண்டு பேராக இவனுக்கு இரு மனைவிமார். இன்னுமா இவன் சிறு பிள்ளை? என்னைக் காத்து என் துயரத்தையெல்லாம் துடைக்கும் வயதா இவனுக்கு இல்லை? -என்றெல்லாம் எண்ணுகின்றான் கவிஞன். அவன் மனத்தில் பொங்கியெழும் ஆத்திரத் திற்குக் குறைவில்லை. சண்முகநாதன் சந்நிதி முன் வந்து நின்றதும் அவன் கொண்டிருந்த ஆத்திரம் எல்லாம் ஒரு பாடலாக வடிவெடுத்து விடுகின்றது. முன்னம்நின் அன்னை அமுதுாட்டி மையிட்டு முத்தம் இட்டுக் கன்னமும் கிள்ளிய நாளலவே என்னைக் காத்தளிக்க அன்னமும் மஞ்ஞையும் போல்இரு பெண்கொண்ட ஆண்பிள்ளை, நீ! இன்னமும் சின்னவன் தானோ! செந்தூரில் இருப்பவனே. என்பதுதான் அந்தப் பாடல்.

  • அன்னமும் மஞ்ஞையும் போல்இரு

பெண்கொண்ட ஆண்பிள்ளைநீ!’ என்று சொல்வதில் கவிஞனின் ஆங்காரம் தொனிக் கின்றது. "இன்னமும் சின்னவன் தானோ!' என்று பாடலை முடிக்கும் போது ஆத்திரத்தின் கொடு முடியைக் காண முடிகின்றது. இவ்வாறு முருகன் முன்