பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர்.தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 383 வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்கு மயில் மேல்கொண்ட வீறு மலர்முகம் ஆறும் விரை கமலக் கால்கொண்ட வீரக் கழலும் கண்டான் என்று முருகனையும் பக்தனையும் காட்டுகின்றார் திரு. தொண்டைமான். அத்துடன், பக்தன் அதிசயித்து நிற்கின்றான். அவனுக்கு இரு புறங்களிலும் இரண்டு பெண்கள் நிற்பதையும் கான்கின்றான். அன்னம் போன்ற மென்மையும், மயில் போன்ற சாயலும் உடைய வள்ளி யும் தெய்வயானையும் அவனுடன் மிகவும் நெருக்கமாகவே ஒட்டிக்கொண்டு நிற்கின்றனர்.பக்தன் இந்தக் காட்சியைக் கண்குளிரக் காண்கின்றான். பக்தன் நல்ல கவிஞன். கவிஞனுக்குத்தான் வறுமைவழி வழியாகவரும் சொத்தா யிற்றே. அவன் தன் துன்பங்களை அந்த முருகன் சந்நிதி யில் நினைக்கின்றான்' என்று கூறுகின்றார். முருகன் சந்நிதி முன் அவன் நினைப்பதென்ன? ஏன் இந்த முருகன், கலியுகவரதன் என்று எல்லோராலும் போற்றப்படுபவன், நம் துன்பங்களைத் துடைக்கவில்லை? ஏதோ அவன் சிறுவன் தான். பால் மணம் மாறாத பாலன் தான். அவனுக்கு என் சிரமங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் உண்டா? அன்னையின் அரவணைப்பிலிருந்து கொண்டு அவனது மடியில் விளையாடுவான், அன்னைக்கோ இவன் அருமந்த பிள்ளை. இந்தப் பிள்ளை யின் கண்ணுக்கு மையிட்டு நெற்றிற்குப் பொட்டிட்டு அழகு பார்த்துக் கொண்டிருப்பவள் இவள், வாரி யனைத்து முத்தம் கொடுப்பாள்: அவனிடமிருந்தும் முத்தம் பெறுவாள். இப்படியே அன்னையும் அருமந்த மகனும் விளையாடத்தான் நேரம் இருக்கும். பக்தனைப்