பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3&& மலரும் நினைவுகள் நூல் என் கருத்தை விளக்குவதுபோல் அமைந்தது. மூன்று நாட்களும் இவருடன் நெருங்கியே பழகி வந்தேன். காரணம் இவர்தம் எளிமை; குழந்தைத் தன்மை; எவருடனும் இன்முகத்துடன் உரையாடும் பண்பு, இலக்கியம், கவிதை, சிற்பம் இவைபற்றியே அடிக்கடி பேசும் இரசிகத் தன்மை எவரையும் ஈர்க்கும் பெற்றியது. நினைவு-1 :1949-கம்பன் திருநாளைக் கண்டு களித்து துறையூருக்குத் திரும்பிய ஒன்றிரண்டு நாட்களில் வைரி செட்டிபாளையம் (திருச்சி மாவட்டம்) திரு. S. R. நாக ரெட்டியாரால் சீரும் சிறப்புமாக நடத்தி வந்த விவேகாநந்தர் வாசக சாலையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார் திரு. தொண்டைமான். துறையூர் சிலோன் லேபர் கமிஷன் ஏஜண்டு திரு. K. S. முத்துவேல் பிள்ளை யவர்கள் புருஷ்காரமாக நின்று தொண்டைமான் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப் பெற்ற விழா இது. இந்த விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். தொண்டைமான் பேச்சென்றால் சொல்ல வேண்டுமா? அவரது சஞ்சாரம் கவிதை உலகில் தானே. அவர் அவையோரைச் சுவைக்க வைத்த இரண்டு பாடல்கள் மலரும் நினைவுவாக வெளிப் படுகின்றன. (1) திருச்சீரலைவாய் செல்லுகின்றான் ஒரு பக்தன், அரிசனங்கள்-இராமாநுசர் கூறும் திருக்குலத்தார்கள்உட்பட எல்லோருக்கும் சேவை சாதிக்கும் செந்தில்வேலன் சந்நிதிக்குதான் செல்லுகின்றான். அந்த முருகனோ சிறு குழந்தை; பாலறாவாயன். வேலேந்தி விளையாடும் இளங் குமரன்-மயிலேறி விளையாடும் மாணிக்கம் என்றெல்லாம் போற்றித் துதிக்கப்பெறும் ஆறுமுகன்தான். செந்தூர் ஆலயத்தில் சண்முக விலாசத்தைக் கடந்து உள்ளே சென்றதும் பக்தனை ஆட்கொள்ள ஓராறு முகங்களுடனும் ஈராறு கைகளுடனும் வேலேந்திய நிலையில் சண்முக நாதன் நிற்பதைக் காண்கின்றான்.