பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. கலெக்டர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 1 949-areasenoa, நடைபெற்ற கம்பன் திருநாளில் முதன் முதல் அறிமுகமானவர். இரசிகமணி, டி.கே.சி.யுடன் சென்று இவர் மருமகன் திரு. W.K..ே நடராசன் இல்லத்தில்தான் மூன்று நாட்கள் தங்கியிருந் தேன். (அழகப்பா கல்லுரரி ஆசிரியர் குடியிருப்பிலுள்ள ஒரு திருமாளிகையில்) மூன்று நாள் ஒரே இடத்தில் தங்கி யிருந்தமையால் இவருடன் நெருங்கிப் பழக வாய்ப்புகள் கிடைத்தன. தவிர, இரசிகமணி டி.கே.சியும் அதே இல்லத்தில் தங்கியிருந்தபடியால் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் பற்றி ஒரளவு நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. இங்கு கலெக்டர்’ என்பது அவ்வளவு முக்கிய மல்ல: அது அரசு அதிகாரி என்பதை மட்டிலும் காட்டும் சொல்; வருமானத் துறையில் மாவட்டத் தலைவர் என்ற நிலையை (அந்தஸ்தை)க் குறிப்பிடுவது. நான் அப்போது அறிந்து கொண்டது: தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கலைஞர்; இலக்கிய ரசிகர்; இவர் பேச்சும் மூச்சும் கம்பன் புகழ்பாடும். இத்தனைக்கும் மேலாக இரசிகமணியின் பிரதம சீடர். ஆங்கில எழுத் தாளர் பாஸ்வெலுக்கு டாக்டர் ஜான்செனிடம் கொண் டிருந்த பிடிப்பு போன்ற ஒன்று, இவர் இரசிகமணியிடம் கொண்டிருந்தது’ என்பது. பின்னர் இவரால் எழுதப் பெற்று வெளிவந்த (1961) ரசிகமணி டி. கே. சி. என்ற