பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 9 % மலரும் நினைவுக்ள் ஆழியான் ஆழி அரன்மழுத்தான் என்பான் கோழியான் குன்று எறிய வேலென்பான்-ஊழியான் அங்கை எழுத்தாணி அருள் என்பான் மாவண்டுர் சிங்கன் உலைக்களத்தே சென்று. என்பது பாடல். இப்படிக் கம்பனால் மட்டிலும் தான் பாட முடியும்' என்று கூறி என்னை மகிழ்வித்தார். நினைவு-3 : 1959.மார்ச்சு என நினைக்கின்றேன். திருநெல்வேலி இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. நவநீதக் கிருட்டிணன் என்ற என் அருமை நண்பர் தமது பள்ளி மாணவர் மன்ற ஆண்டு விழாவில் சொற்பொழிவாற்ற என்னை அழைத் திருந்தார். இவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அதிபர் அமரர் வ. சுப்பையா பிள்ளையின் நெருங்கிய உறவினர். அச்சேறாமல் காத்துக்கிடந்த கவிதையநுபவம்’ என்ற நூலின் கைப்படியையும் அதற்குரிய ஏழு வரை படங்களையும் என்னுடன் எடுத்துச் சென்றிருந்தேன். திரு. நவநீதக் கிருட்டிணன் பரிந்துரையால் கழக வெளி யீடாக இதனைக் கொண்டு வரலாம் என்று எண்ணி னேன். நான் தங்கவும் உணவு கொள்ளவும் ஒரு விடுதியில். ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. விழா அன்று காலை யிலேயே நெல்லை அடைந்தேன். விழா முடிந்து மறுநாள் அலைவாய் அண்ணலைச் செந்தில் குமரனைச் சேவிக்க வேண்டும்என்ற பேராவல் என் உள்ளத்தில் இருந்தது. அன்று காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நானும் திரு. நவநீத கிருட்டிணனும் எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம் சென்றோம். அதன்