பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 烹95° அதிபர் திரு சங்கையா பிள்ளையைப் பார்த்தோம். நாளை செந்தில் வேலனைச் சேவிக்க நினைத்திருக் கின்றேன். உங்கள் மகிழ்வுந்து தந்து உதவினால் வசதி யாகச் சென்று முருகனைச் சேவித்துத் திரும்ப முடியும்' என்றேன். திரு சங்கையாபிள்ளை தருவதாக ஒப்புக் கொண்டார். அன்று நண்பகல் தம் வீட்டில் விருந்தினனாக இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். விருந்துண்டு என் அறைக்குத் திரும்பினேன். அன்று மாலை 3-மணிக்குப் பள்ளி மாணவ மன்ற ஆண்டு விழாவில் பேசினேன். விழா இனிதாக நிறை வேறியது. விழாவிற்குத் திரு. சங்கையா பிள்ளையும் வந்திருந்தார். அப்போது திருபிள்ளை நாளை சிரீவை குண்டம் உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் திரு. தொண்டைமான் பேசுகின்றார். பேராசிரியர் அ. சீநிவாசராகவன் விழாவிற்குத் தலைமை ஏற்கின்றார். திரு. தொண்டைமானும் மகிழ்வுந்து கேட்டுள்ளார். நீங்கள் போகும்போது திரு. தொண்டைமானை சிரீவை குண்ட உயர்நிலைப் பள்ளியில் இறக்கிவிட்டுச் திருச்செந்துார் சென்று முருக சேவையை முடித்துக் கொள்ளுங்கள். நம்முடையமகிழ்வுந்தைப் பார்த்ததும்குருக்கள் உங்களைக் கவனித்துக் கொள்வார். நீங்கள் காலை 8.30க்குத் தயாராக இருங்கள்' என்று சொல்லி வைத்தார். காலை 8.30க்குத் தயாராக இருந்தேன். திரு, தொண்டைமானையும் பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டரையும் ஏற்றிக் கொண்டு மகிழ்வுந்து நான் தங்கி யிருந்த விடுதிக்கு வந்தது. நானும் வண்டியில் ஏறிக் கொண்டேன். கவிதையநுபவத்தின் கைப்படியையும் அவற்றிற்குரிய ஏழு படங்களையும் திரு. தொண்டைமா னின் பார்வைக்காக எடுத்துச் சென்றேன். மகிழ்வுந்தில் செல்லும் பொழுதே நூலைப் பற்றிச் சிறிது கூறினேன். 'கவிதையநுபவம் நம்மிடம் ஏற்படும் போது உடலிலும்