பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 மலரும் நினைவுகள் சில மாறுதல்கள் உண்டாகின்றன. திருவாசகப் பாடல் களை ஒதும் போது மெய்ம் மயிர் சிலிர்ப்ப, விதிர் விதிர்ப் பெய்தி, கருங்கல் மனமும் கரைந்துருகக், கண்கள் தொடு, மணற் கேணியின் சுர்ந்து நீர் பாயும்’ என்று கூறப் பெறு: கின்றது. வான்கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் என்பது இராமலிங்க வள்ளலின் திருவாக்கு. இங்கு 'உள்ளம் கலந்து பாடுதல் முக்கியமானது. அப்பொழுது தான் கவிஞனின் இதயம் படிப்போரின் இதயத்தைத் தொட்டு விடுகின்றது. நாம் கவிதையைப் படித்துத் gitüllil ugi · GT sistl–6b– glavě 36i' (Stimulus-Response) தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வெளியுலகி லுள்ள பொருள்கள் நம்புலன்களைத் துரண்டுவதனால் தான் நாம் செய்திகளை அறிந்து கொள்ளுகின்றோம். இவை துரண்டலை எழுப்பும் அடையாளங்களா கின்றன, நம்முடைய கண்கள் அச்சிட்ட கவிதை யின் சொற்களைப் பார்க்கின்றன. கவிதையை வாய்க்குள்ளும் படிக்கின்றோம்; வாய் விட்டும் படிக்கின் றோம். கண்ணின் மூலமும் காதின் மூலமும் ஏற்படும் தூண்டல்கள் நம் மூளையை அடைகின்றன. நாம் கவிதையின் பொருள்களை- கருத்துகளை- அறிகின் றோம். நம் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழுகின்றன. இவை தம்மொடு தாமாகக் கலந்து தொகுதிகளாகிப் பிற எண்ணங்களுக்கும் குறியீடுகளாக அமைகின்றன. இவை யாவும் பெருமூளையின் புறணியில் (Cerebral cortex) நடைபெறுபவை. நம் மூளையிலுள்ள ஒருபகுதியாகியமேற் பூத்தண்டு(Hypo-thalamus)உள்ளக்கிளர்ச்சிநிலையில்பங்கு கொள்கின்றது என்பதை ஆய்வுகளால் கண்டறிந் துள்ளனர். உள்ளக் கிளர்ச்சிபற்றிப் பல கொள்கைகளும்