பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 மலரும் நினைவுகள் தெளிவாக உளங்கொண்டால்தான் 'கவிதையநுபவம்' ஏற்படும். அடிப்படைக் கருத்துகளை நன்றாகப் புரிந்து கொள்ள இயலும்’ என்று கூறிமுடித்தேன். மகிழ்வுந்தில் போகும்போதே இக்கருத்துகள் கூறப் பெற்றன. திரு. தொண்டைமான் நூலின் முற்பகுதிகளின் பல ஏடுகளைப் புரட்டிப் பார்த்தார்கள்; படங்களையும் நன்கு உற்று நோக்கினார்கள். இறுதியாக, நூல் ஒரே அறிவியல் மயமாக இருக்கின்றதே. இக்கருத்துகள் மனத்தில் ஏற்றிக்கொண்டு கவிதைகளைப் படித்தால் கவிதையதுபவம் காற்றாகப் பறந்து விடும்போல் தோன்று கின்றது' என்று அவருக்கே உள்ள முறையில் சிரித்துக் கொண்டே கூறினார்கள். திரு. தொண்டைமானிடம் நன்றாகப் பழகும் போதுதான் அவருடைய தூய்மையான உள்ளத்தில் எழும் அபிப்பிராயங்களைப் புரிந்து கொள்ள முடியும். கள்ளம் கபடமற்ற பேச்சின் சாரத்தையும் உணர்ந்து கொள்ள இயலும். அருகிலிருந்த பேராசிரியர் கு. அருணாசலக் கவுண்டர் ஆமாம் உண்மைதான். நம் ரெட்டியார் எதைப் பேசினாலும் எழுதினாலும் அவருடைய அறிவியல் கருத்துகள் முந்திரிக் கொட்டை போல் முன் நின்று கவிதை யநுபவத்தைக் காற்றில் பறக்கச் செய்கின்றது' என்று ஒத்து ஊதினார். இப்படிப் பலர் ஒரு பெரியவரைச் சுற்றியிருந்து முகத்துதிபாடி அவருடைய சிந்தனையை மழுங்க வைத்து விடுகின்றனர். அப் பெரியவரும் தாம் கூறியவையே சரி என்ற ஒரு பிரமையை (மயக்கத்தை) அடைந்துவிடுகின்றார். இதனை அன்றாட வாழ்க்கையில் பலரிடம் காணலாம். இத்தகைய வீர வழிபாடு (Hero-worship) பலருடைய வாழ்க்கையில் கானலாம். நான் சொன்னேன்: ஒவல்டின்' என்ற ஒரு பானம் உண்டல்லவா? இது பருகுபவர்கள் அனைவருக்குமே இன்பத்தை நல்குவது. என்றாலும், அப்பானத்தில்