பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் த்ொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் :97 இன்னின்ன சத்துகள் சேர்ந்துள்ளன என்றும், அச்சத்து. களின் அடிப்படைத் தன்மைகள் இவை என்றும் புரிந்து கொண்டு அதனைத் துய்த்தற்கும், ஒன்றுமே அறியாமல் ஒவல்டினைப் பருகித் துய்த்தற்கும் வேறுபாடு உண்டு: அவ்வேறுபாடு தரத்தில் உள்ளது. சத்துகளின் தன்மை களை அறிந்து கொண்டு ஓவல்டினைத் துய்த்தலால் சுவையதுபவம் மிகுமேயன்றிக் குன்றிப் போவதில்லை. ’’ இன்னோர் எடுத்துக் காட்டைத் தருகின்றேன். ஒரு மகிழ்வுந்தினை அதன் பொறி நுட்பம் முதலியவற்றை நன்கு அறிந்து கொண்டு கடவுவதற்கும், ஒன்றுமே அறியாது இயக்கும் முறைகளை மட்டிலும் அறிந்து கொண்டு கடவுவதற்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. இதனை அநுபவத்தால் அறிய முடியுமேயன்றித் தருக்க முறையால், - வாதமுறையால்- அறிந்து கொள்ள முடியாது.' மற்றுமோர் எடுத்துக்காட்டு. மருத்துவர் ஒருவர்" உடற் கூற்றினை நன்கு அறிந்து கொண்டு சிக்கலான பிரசவத்தின்போது வயிற்றைக் கிழித்துக் குழந்தையை எடுக்கின்றார். இப்படிக் கிழிக்காமல் கருவாயிலேயே சிறுசிறு அறுவை முறைகளைக் கையாண்டு பெண்ணைப் பிரசவிக்கச் செய்கின்றார். இம்முறைகளால் தாயும் சேயும் காப்பாற்றப் பெறுகின்றனர். இதனால் அந்த மருத்துவர் காயமே இது பொய்யடா. காற்றடைத்த பையடா’ என்று சொல்லிக் கொண்டு துறவியாகி, விடுவதில்லை. தன் மனைவியிடம் காதல் உண்டாகின்றது. இல்லற இன்பத்தில் ஈடுபடுகின்றார். மகப்பேறும் உண்டா கின்றது. ” பிறிதுமோர் காட்டு. ஏன் அங்கும் இங்கும் போக வேண்டும். நம்முன் உள்ள திரு. தொண்டைமானை எடுத்துக் கொள்வோம். இவர் பரமபக்தியையுடையவர் என்பதை மறுத்தற்கில்லை. வேங்கடம் முதல் குமரி