பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 மலரும் நினைவுகள் வரை உள்ள பல திருக்கோயில்களை வழிபட்டிருக் கின்றார். கோயில் கலையை ஆராய்ந்துள்ளார். சிற்பக் கலையை வடித்துக் காட்டுகின்றார். தஞ்சையிலுள்ள சிற்பக் கூடம் இவர்தம் அழியாப் புகழ் பெற்ற அற்புதப் படைப்பு. கல்லும் சொல்லாதோ கவி’ என்ற கருத்தை பல அற்புதப் பாடல்கள் மூலம் காட்டுவார். கண் கண்ட தெய்வத்தைக் கல்லிலே இருப்பதை நமக்குக் காட்டுவார். கல்லில் உருவான கற்பனையை நமக்கு விளக்குவார். நாணமும் பெண்மையும் கல்லிலே இருப்பதைக் காட்டி மகிழ்வார். காதலும் புலவியும் கல்லிலே இருக்கும் நுட்பத்தை நமக்குக் காட்டுவார். இங்கனம் கலைகளின் நுட்பங்களை எல்லாம் அறிந்த இவர் கோவிலில் உள்ள மூர்த்திகளின் அழகில் மூழ்கித் தம்மையே மறந்து விடுவார். இவ்வளவு அறிவு நுட்பத்தைக் கருவிலே திருவுடைய வருக்கு பக்தி குறைந்து விடும் என்று சொல்ல முடியுமா?’’ 'இறுதியாக ஒன்று சொல்வேன். எல்லாவித அறிவியல் உண்மைகளை அறிந்து கொண்டு ஆண்டவனின் படைப்புத் திறனை உணர்வதற்கும், வெறும் கற்பனை யிலேயே உணர்வதற்கும் வேறுபாடு உண்டு, ஐன்ஸ்டைன் என்ற அறிவியல் மேதை உண்மையான அறிவியலறிஞன் தான் ஆண்டவன் படைப்பின் விந்தையையும் சமயங்களின் உண்மைகளையும் நன்முறையில் உணரமுடியும்’ என்பார். திரு. தொண்டைமான் என் பேச்சை கூர்ந்து கவனித் தார். நான் ஆய்ந்து வெளிப்படுத்தும் கருத்துகளில் கவர்ச்சியுற்றார். பின்னர், மிஸ்டர் ரெட்டியார், நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு உடன்பாடே. நான் வருவாய்த் துறை ஆய்வாளர் பதவியிலிருந்து இன்று வரை பல நிலை களில் கொண்ட பதவியின் போதும் பின்னரும் என்னைச் சூழ்ந்திருக்கும் புலர் என்னை உகப்பிக்கும் பொருட்டு நான் சொல்வதெல்லாம் சரி என்று தாளம் போடுவர். இதனால் ஒரு மயக்கம் ஏற்பட்டு நான் சொல்வன எல்லாம்