பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர்.தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் 399. சரியே என்று நினைத்துக் கொள்வேன். இப்போது இப் பிழையான போக்கை உணர்கின்றேன்' என்றார். அருகிலிருந்த பேராசிரியர் கவுண்டர் அவர்களும், "ஆமாம், ஆமாம்; ரெட்டியார் எப்போதும் அறிவியல் வழியே கருத்துக்களை விளக்கும் பழக்கமுடையவர். நமக்குப் புரியும் வண்ணம் விளக்கி விடுவார். அவர் ஒரு அபூர்வப் பிறவி என்று தொண்டைமான் கருத்துக்குத் தாளம் போட்டார். இந்த நிகழ்ச்சி இன்றும் என் உள்ளத் தில் பசுமையாகவே உள்ளது. திரு. தொண்டைமானையும் G Lμ τ Ιτ ξή ή μ, ή கு. அருணாசலக் கவுண்டரையும் சிரீவைகுண்டம் பள்ளி யின் வாயிலில் இறக்கி விட்டிருக்கும் பொழுதே அவரை வரவேற்கப் பள்ளித் தலைமையாசிரியர் திரு. ஆதிநாதன் தயாராக இருந்தார். திரு ஆதிநாதன் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (1940-41) என் ஒரு சாலை மாணாக்கர். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக என் மனத்தில் எழுந்தன. செந்தில் நாதனைத் தரிசித்துத் திரும்பும்போது தம் இல்லத்தில் திருவமுது கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தார். சுமார் முற்பகல் 11-மணிக்கு அலைவாய் அப்பனைச் சேவித்தேன். மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயல்பொழில் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னே அந்த நான்முகனே' என்ற பாடல் என் மனத்தில் குமிழியிட்டது. 1. கந்தரலங்காரம்-90