பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 - மலரும் நினைவுகள் தரிசனத்தை முடித்துக்கொண்டு பகல் பன்னிரண்டரை மணிக்குச் சிரீவைகுண்டம் திரும்பினேன். பள்ளி விழா முடியும் சமயம். நன்றியுரை நடைபெறும் சமயம் வந்து சேர்ந்தேன். அன்று விழாவில் கலந்து கொண்ட சுமார் பத்துப் பெரியோர்க்கு திரு. ஆதிநாதன் அளித்த விருந்தில் நானும் கலந்து கொண்டேன்; உண்டபின் ஒரு பத்து மணித்துளிகள் பேராசிரியர் அ. சீநிவாச ராகவனுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். சுமார் 2-30 க்குத் திருநெல்வேலி திரும்பினோம். அன்று மாலை கவிதை யநுபவத்தின் கைப்படியையும் அதற்குரிய படங்களையும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் சேர்த்து விடுவ தாகக் கூறி, திரு. நவநீதக்கிருட்டிணன் பெற்றுக் கொண் டார். மாலை ஆறு மணிக்குத் நெல்லையை விட்டுத் திரும்பினேன். பரம்பரை வாசனை’ என்று சொல்வார்கள். திரு . தொண்டைமானின் பாட்டனார் ஒரு நல்ல புலவர். இவரது தந்தையார் முத்தையாத் தொண்டைமான் திருநெல்வேலி இந்து கல்லூரி-உயர்நிலைப் பள்ளியில் ஓர் ஓவிய ஆசிரியர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் இவரிடம் ஒவியப் பயிற்சி பெற்று ஒவிய ஆசிரியர்களா யினர் என்று சொல்வார்கள். இந்த நல்ல பரம்பரையில் வந்த திரு. தொண்டைமான் தமிழகம் கலைமணி என்று பாராட்டத்தக்க வகையில் உயர்ந்தது வியப்பன்று. கருவிலே திருவுடைய இப்பெருமகனை டி.கே.சி.யின் வட்டத்தொட்டி ஒரு கலைஞராக இரசிகராக, இலக்கியப் பண்பாளராக, வளர்த்து விட்டது. இது தவிர, திரு. தொண்டைமான் தமது ஒழுக்கத்தாலும் உழைப்பாலும் நேர்மை தவறாத நெறியைக் கடைப்பிடித்தமையாலும் படிப்படியாக உயர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் (District Collector) என்ற உயர் பதவியையும் எட்டிப் பிடித்தவர். இரசிகமணி டி.கே.சியின் அன்புக்குப் பாத்திர மானவர்; அரசியல் ஞானி அருமை இராஜாஜியின்