பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலெக்டர் தொ, மு. பாஸ்கரத் தோண்டைமான் 4鲁蕙 ஆசியை நிறையப் பெற்றவர். கம்பனடிப் பொடி சா. கணேசனின் நட்பால், காரைக்குடிக் கம்பன் கழகத் தொடர்பால் இவருடைய புகழ் மேன்மேலும் பரவியது. நான் திருப்பதியிலிருந்தபோது இவருடைய மணி விழா 1964இல் சீரிய முறையில் கொண்டாடப் பெற்ற தையும் அதன் நினைவாக 'மணிவிழா மலர் ஒன்று வெளி வந்ததாகவும் இந்து நாளிதழில் செய்தியாக வெளிவந்த தைப் பார்த்து மகிழ்ந்தேன். அதன் பிறகு இவரைப் பற்றிய செய்தி ஒன்றும் எட்டவில்லை. திருப்பதியில் என்னை மறந்து யான் மேற்கொண்ட தமிழ்ப் பணியால் பல பெரியார்களின் தொடர்பை இழக்க நேர்ந்தது. இவர் திருநாடு அலங்கரித்த செய்திகூட ஒராண்டுக்குப் பின்னரே அறிய முடிந்தது. இந்துவில் வந்த இரங்கற் செய்தி எப்படியோ என் கண்ணில் படாமல் போயிற்று. இன்று என் உள்ளத்தில் இருக்கும் தொண்டைமானை இப்படிச் சொல்வேன். கறுப்புக்கு ஒர் அழகு உண்டு. கிருஷ்ண விக்ரகம்’ என்றுதானே சொல்கின்றார்கள்! இவர் திருமேனி எண்ணெய் உண்ட இருள்புரை மேனி' (கம்பன் வாக்கு) என்று சொல்லலாம், கலைப் பண்பு நிறைந்த இவர்தம் முகப்பொலிவு எவரையும் ஈர்க்கும் பெற்றியது. காரைக்குடியில் ஆண்டுக்கொரு முறையாக சில ஆண்டுகள் நெருங்கிப் பழகிய கலைமணி -ஏன்? கவிமணியும் கூடத்தான்-திரு. பாஸ்கரத் தொண்டை மானின் முகத்தில் தவழும் கலைஞனுக்கு உரிய செம்மை யான பண்பாட்டின் பொலிவும் ஒளியும் இன்றும் என் மனக்கண்முன் தென்படுகின்றன. அவர்தம் புன்முறுவல் பூத்த திருப்பவழத்தில் வெளிப்படும் கம்பனின் கவியமுதம் என் மனக்காதில் பாய்ந்து இன்பம் தந்து கொன் டிருப்பதனையும் உணர்கின்றேன். நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. (குறள்-783) ம நி 26