பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் பண்புடையார் பட்டுண்டு உலகம்; அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் (குறள்-996). (1941-50) துறையூரில் பணிபுரிந்த காலத்தில் நான்கு மாவட்ட முனிசிப்புகளின்தொடர்பும், காரைக்குடி யில் பணியாற்றிய காலத்தில் ஒரு மாவட்ட முனிசிப்பின் தொடர்பும் ஏற்பட்டன. துறையூரில் தொடர்பு கொண்ட நால்வரிடமும் இலக்கியத்தைச் சுவைக்கும் பழக்கம் இல்லாததால் அவர்கள் தொடர்பு நட்பாக வளரவில்லை; காரைக்குடிக் கம்பன் திருநாளில் (1949) தொடர்பு ஏற்பட்ட மாவட்ட முனிசீப்புதான் திரு. எ ஸ் மகராஜன் அவர்கள். அவர்கள் துரத்துக்குடியில் முனிசீப்பாகப் பணி யாற்றி வந்தார்கள். அவருடன் அறிமுகமான மற்றொர் அன்பர் வழக்குரைஞர் A. C. பால் நாடார் அவர்கள். பின்னவரிடம் பழகினவரையில் அவர் உள்ளம் பால் போன்றிருந்தமையைக் கண்டேன். பெயர்ப் பொருத்தம் சரி என்று பட்டது என் மனத்திற்கு. உண்மையான, உள்ளத்துரய்மையான கிறித்தவர் ஒருவரின் தோழமை பெற்ற பேற்றால் என் உள்ளம் நிறைவு கொண்டது. ஆனால் அவரைக் காரைக்குடியில் அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பு பெறவில்லை.ஆனால், திரு மகராஜன் அவர்களை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. அக்காலத்தில் நான் கம்பனையும் வில்லியையும் துய்ப்பதுடன் அதிகமாக என் மனம் ஈடுபட்டிருந்தது கல்வியியல், உளவியல்,