பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 40.3. அறிவியல் (சிறப்பாக அணுவியல், உடலியல்) என்ற துறைகளில்தான். திரு. மகராஜன் இத்துறைகளில் நான் அதிகமாக ஈடுபட்டதைக்கண்டு வியந்தார்;இவற்றில் நான் நூல்களை படைத்து வருவதைப் போற்றி னார்; உற்சாகப் படுத்தினார். அவரிடம் தனிமையில் உரையாடினபோதுதான் இலக்கியத்திலும் சமயத்திலும், அறிவியலிலும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டைக் காண முடிந்தது. நினைவு -1 : கம்பராமாயணத்தில் ஆழங்கால் பட்டு வெளிவரும்போது நம் உள்ளத்தில் மிஞ்சி இருப் பதைப் பற்றி அவர் கூறுவார்: மனிதனுடைய சிறுமை யைப்பற்றிய உணர்ச்சியல்ல; மனிதனுடைய புன்மையைப் பற்றிய உணர்ச்சியுமல்ல. மனிதனுடைய நிலையாமை யைப்பற்றிய உணர்ச்சியும் அல்ல. மனித ஆன்மா எவ்வளவு மாண்புடையதாயிருக்கின்றது. மனிதனுடைய ஆற்றல் எப்படிக் கங்குகரையற்று இயங்குகின்றது!’ என்ற வியப்பும் தன்னம்பிக்கையும் மேலோங்கி நிற்கின்றன!’ கம்பராமாயணம் நமக்கு அவ்வளவு மன நிறைவினைத் தருகின்றது' என்று வியந்து கூறுவார். திரு. மகராஜனுக்கு ஆங்கில இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு உண்டு. செகப்பிரியரின் நாடகங்களை நன்றாகப் படித்து அநுபவித்தவர். அந்த நாடகங்களில் வரும் கதை மாந்தர்களின் பண்பைப் பாராட்டிப் பேசுவார். மனிதன் என்ற பொருள் என்ன வேலைப்பாடு நிறைந்தது! அவனு டைய பகுத்தறிவின் மாட்சிதான் என்ன! அவனுடைய அறிவுத்திறன் எவ்வாறு எல்லையற்று இயங்குகின்றது! உருவத்திலும் இயக்கத்திலும் என்ன சிறப்பு: செயலிலே கந்தர்வனைப் போலிருக்கின்றானே! உணர்விலே தெய்வத்தை ஒத்திருக்கின்றானே! உலகத்திற்கோரழகு! விலங்கினத்தின் வெற்றி!” என்று ஹேம்லெட்வாக்கில் செகப்பிரியர் வியப்பதைக் காட்டுவார். இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே கம்பனுக்கு வந்து விடுவார். 'கம்பன் கண்களைக் கொண்டு மனிதனைப் பார்க்கும்