பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 மலரும் நினைவுகள் போது, மனித இனம் இன்னும் ஒரு படி உயர்ந்து விடுகின்றது. செகப்பிரியரின் சிறந்த பாத்திரங்கள்கூட குற்றங் குறையுள்ளவர்களாக இருப்பர். ஆனால் கம்ப னுடைய காவியமாந்தர்கள் (Epic characters) இலட்சிய மாந்தர்களாய், பூர்ண நிறைவு பெற்றவர்களாய், மானிட சாதிக்கே பெருமை தேடிக் கொடுப்பவர்களாய், அமைந் துள்ளனர்' என்று காட்டுவார். இரு பெருங்கவிஞர்கள் படைத்த கதை மாந்தர்கள், காவிய மாந்தர்கள் ஆகிய இருவரையும் ஒப்பாய்வு செய்வதற்கு நமக்கே விட்டு விடுவார். கம்பன் படைத்த காவிய மாந்தர்களில் பல எடுத்துக் காட்டுகளையும் தருவார். ஒன்றை மட்டிலும் ஈண்டுக் காட்டுவேன். 'இராமலட்சுமணர்கள் ஒரு மலையின் உச்சி யில் நின்று கொண்டுள்ளனர். அவர்களுடைய பண்பு நலங் களை யெல்லாம் அதுமன் வாயிலாகக் கேட்ட சுக்கிரீவன் அவர்களை ஆர்வத்தோடு சந்திக்க வருகின்றான். ஒரு மூலை திரும்பியவுடன் அவர்களுடைய உருவம் திடீரென்று கண்ணுக்குப்படுகின்றது. உடனே அவர்களுடைய உருவ அழகில் சொக்கி அப்படியே நின்று விடுகின்றான், இறைவன் படைப்பில் இப்படியும் உண்டா என்று வியப்பு அடைகின்றான். ஏதோ திருமால் என்றும், சிவன் என்றும், நான்முகன் என்றும் நாமங்களைச் சூட்டித் தெய்வங்களை வணங்குகின்றோமே, அந்தத் தெய்வக் கூட்டங்களை யெல்லாம் மானிடச் சாதி வென்று விட்டது என்று. தோன்றுகின்றது சுக்கிரீவனுக்கு. ஆறுகொள் சடிலத் தானும் அயனும் என்(று)இவர் களாதி வேறுள குழுவை யெல்லாம் மானிடம் வென்ற தம்மா' என்று போற்றுகின்றான்' என்று கூறுவார். இத்துடன் நிறுத்தாமல் விளக்கமும் தருகின்றார், அப்படியானால் 1. கிட்கிந்தை-நட்புக்கோள்-18.