பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜஸ்டிஸ் டாக்டர் எஸ். மகராஜன் 405 மானிடப் பிறவி கிடைத்ததனாலேயே வெற்றி கிடைத்து விட்டதா? இல்லை. கம்பன் அப்படிச் சொல்லவுமில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், அது வெற்றுரையாக முடிந் திருக்கும். மானிடப்பிறவி நமக்கு அரிய வாய்ப்புகளை நல்குகின்றது; அந்த வாய்ப்புகளை உரிய முறையில் நாம் பயன்படுத்துவோமேயானால் பரிபூரணத்தையே தொட்டு விடலாம். தேவர்களையும் வென்று விடலாம் என்பதையே பல கோணங்களிலிருந்து வற்புறுத்திக் காட்டுவான் கம்பன்' என்டார். நினைவு -2 : ஒரு சமயம் (உயர்மன்ற நீதிபதியாக உயர்ந்த பிறகு) அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ஐயா, தாங்கள் கம்பனிலே தோய்ந்து அவனது கவிதைக் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் காட்டிக் கொண்டிருக் கின்றீர்களே, வள்ளுவர் பற்றி அதிகமாகப் பேசுவ தில்லையே. ஏன்?' என்றேன். உடனே ஆரம்பித்து விட்டார். வள்ளுவரின் சொல்லாட்சி பற்றிப் பேசத் தொடங்கி விட்டார். எத்தனை எடுத்துக்காட்டுகள்! வள்ளுவரைப் போன்ற சிறந்த கவிஞன் வெண்பா அல்லது விருத்தப் பாவினுள்ளே பூர்ண சுதந்திரத்தோடு நடமாடலாம். ஒவ்வொரு விருத்தத்திலும் நான்கு அடிகள்: ஒவ்வோர் அடியிலும் எத்தனையோ சீர்கள்; எதுகை, மோனை கவரி வீச, நீண்டு விரிந்த சீர்கள் அணி வகுத்து நிற்க, உணர்ச்சி பாவத்தோடு தமிழ்ச் சொற்கள் நடன மாட, கவிஞன் இராஜ கம்பீரத்தோடு, நான்கு வீதிகளும் சுற்றிப் பவனி வரலாம்; நிற்க வேண்டிய இடங்களில் நின்றும், துரித வேளைகளில் துரிதமாகச் சென்றும் காட்சி கொடுக்கலாம். இத்தகைய வசதிகளையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வளமான பாவினங்களையெல்லாம் துறந்து, ஒன்றே முக்கால் அடிக் குறள் ஊசி முனையிலே, ஒற்றைக் காலில் நின்று காட்சி தருகின்றார், தியாக மூர்த்தியான வள்ளுவர். இவ்வளவு கட்டுப்பாடும் துன்பமும் அடக்க